நாம் உண்ணும் ஒவ்வொரு உணவு வகைகளிலும் பல்வேறு வித நன்மைகள் இருக்கிறது. உணவு என்பது ஒவ்வொருவரின் அடிப்படை தேவையாக கருதப்படுகிறது.
சில உணவுகளில் அதிக ஊட்டசத்துக்கள் இருக்கும். சிலவற்றில் மிக சில சத்துக்களே இருக்கும். ஆனால், ஒரு சில உணவுகளில் மட்டுமே மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கும்.
அப்படிப்பட்ட பல்வேறு உணவுகளில் நாம் சாப்பிடும் கடல் சார்ந்த உணவும் ஒன்று.இறால் ஒரு முக்கிய கடல் உணவாகும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை விரும்பி உண்ணுவார்கள். இவற்றில் பல வித ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது.
உலக அளவில் இதற்கென்றே பிரத்தியேக உணவு பிரியர்கள் இருக்கின்றனர். கடல் உணவுகளில் மிகவும் அற்புதமான சுவையையும், உடல் ஆரோக்கியத்தையும் இவை கொண்டுள்ளது.
இறாலில் அதிகளவு புரதமும் (Protein) மற்றும் வைட்டமின் “டி” (Vitamin D) அடங்கியுள்ளது.
இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும். பிரியாணி வகைகளில் பல உண்டு அதில் ஒன்று தான் இந்த இறால தயிர் பிரியாணி.
இது பெரியவர் களுக்கும் சிறியவர்க ளுக்கும் மிகவும் பிடித்த மானது. சரி இப்போது அதை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையானவை
இறால்- 200 கிராம்
இறால் தலை - 100 கிராம்
தயிர் - 3 மேசைகரண்டி
வெங்காயம் - முன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 தேக்கரண்டி
பட்டை, லவங்க தூள் - கால் தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - இரண்டு சிட்டிகை
சீரக தூள் - ஒரு ஸ்பூன்
ஓமம்(Ajwan) தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
நெய் + எண்ணை - அரை கப்
கொத்து மல்லி புதினா - சிறிது
பழுத்த சிவப்பு மிளகாய் - இரண்டு
அரிசி வேக வைக்க தரமான பாசுமதி அரிசி - 400 கிராம்
பிரியாணி இலை - இரண்டு
ஷாஜீரா ( caraway seed) - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
சூடான பால் - ஒரு மேசை கரண்டி
சாஃப்ரான் - 6 இதழ்
செய்முறை
இறால் தயிரில் செய்வதால் வேக ரொம்ப நேரம் எடுக்காது. ரொம்ப சீக்கிரமாக தயாரித்து விடலாம். இறாலை தோலெடுத்து இறாலையும், தலையையும் ஆய்ந்து கழுவி வைக்கவும்.
சேர்த்து செய்வதால் இன்னும் கூடுதல் ருசி கிடைக்கும். வெங்காயத்தை நீளமாக அரிந்து வைக்கவும். தயிரில் பட்டை கிராம்பு பொடி,மிளகாய் தூள் ,சீரகத்தூள், ஓமம் தூள், உப்பு, ஏலக்காய் தூள், தனியாத்தூள், போட்டு நன்கு கலக்கி வைக்கவும்.
வாயகன்ற பாத்திரத்தை காயவைத்து எண்ணை + நெய்யை ஊற்றி வெங்காயத்தை போட்டு நன்கு பொன் முறுவலாக வதக்கவும்.
அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட், பாதி கொத்துமல்லி புதினா போட்டு நன்கு வதக்கவும். மற்றொரு அடுப்பில் சாதம் வடிக்க உலையை கொதிக்க போடவும்.
தண்ணீருடன் பிரியாணி இலை , ஷாஜீரா, மீதி உள்ள கொத்துமல்லி புதினா, கரம்மசாலாதூள் சேர்த்து கொதிக்க விடவும்.
இஞ்சி பூண்டு வாடை போனதும் மசால கலக்கிய தயிர் கலவை + இறால் சேர்த்து நன்கு வதக்கி சிறிது நேரம் மசாலாக்க
ளை ஒரு சேர கொதிக்க விடவும், தீயின் தனலை சிம்மில் வைக்கவும். உலை கொதித்ததும் அரிசி தட்டி முக்கால் பதத்தில் வடிக்கவும். கிரிப்பான இறால் கிரேவியில் அரிசியை தட்டி சமப்படுத்தவும்.
சாஃப்ரானை மேலே ஊற்றி 20 நிமிடம் தம்மில் விடவும். சுவையான ஜிங்கா தயிர் பிரியாணி ரெடி. ரொம்ப பிடிச்சிருக்குமே இந்த இறால் பிரியாணியை.