டேஸ்டியான சாமை, காய்கறி பிரியாணி செய்வது எப்படி?





டேஸ்டியான சாமை, காய்கறி பிரியாணி செய்வது எப்படி?

சௌசௌவில் வைட்டமின் ஏ, பி, சி, கே போன்ற சத்துகள் அடங்கியுள்ளன. சௌசௌவில் காணப்படும் வைட்டமின்கள் புற்றுநோய் தடுப்பியாக செயல்படுகிறது என ஆராய்ச்சி யாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 
டேஸ்டியான சாமை, காய்கறி பிரியாணி செய்வது எப்படி?
எனவே இதை உணவில் பயன்படுத்தினால் புற்றுநோய் வராமல் பாதுகாத்து கொள்ள முடியும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சௌசௌ காயை சாப்பிடலாம். 

இது நரம்பு தளர்ச்சியை போக்கி நரம்புகளை கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. சௌசௌவில்  கால்சியம் சத்துகள் காணப்படுவதால் எலும்புகளை வலுப்பெற செய்கிறது. 

எனவே வளரும் குழந்தைகளுக்கு சௌசௌ காயை உண்ண கொடுக்கலாம். வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளை நீக்கி வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளும் சக்தி இதற்கு உண்டு. 
உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து உடலை  சமநிலையில் வைத்துக் கொள்ளும். சரி இனி காய்கறி பயன்படுத்தி டேஸ்டியான சாமை, காய்கறி பிரியாணி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  
தேவையானவை: 

சாமை அரிசி - 500 கிராம், 

வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது),  

தக்காளி - 100 கிராம் (நறுக்கியது), 

கேரட் - 100 கிராம் (நறுக்கியது),  

பீன்ஸ் - 100 கிராம் (நறுக்கியது),  

சௌசௌ -  100 கிராம் (நறுக்கியது), 

பச்சைப் பட்டாணி - 50 கிராம், 

தயிர் - அரை கோப்பை, 

இஞ்சி - தேவையான அளவு,  

பூண்டு விழுது - தேவையான அளவு,  

புதினா - தேவையான அளவு, 

சோம்பு, பட்டைப் பொடி - 2 மேசைக்கரண்டி, 

மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு. 

தாளிக்க: 

நெய் - 100 மி.கி, 

ஏலக்காய், பிரிஞ்சி இலை, கிராம்பு - தலா 2, 

பட்டை, சாதிபத்திரி - சிறிதளவு.

செய்முறை:

சாமை, காய்கறி பிரியாணி
நெய்யைச் சூடாக்கி, தாளிக்கக் கொடுத்த பொருட்களை, சிவக்க வறுத்துக் கொள்ளவும். இதில் சோம்பு, பட்டைப் பொடியைச் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி, புதினாவைச் சேர்க்கவும். நன்றாக வதங்கியதும், தக்காளி சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்.

நறுக்கிய காய்கறிகள், பச்சைப் பட்டாணி சேர்த்து மிளகாய்த் தூள், உப்புடன் ஒரு லிட்டர் (5 டம்ளர்) தண்ணீர் சேர்த்து வேக விடவும். 
பாதி வெந்ததும் தயிர் சேர்த்து வேக விடவும். சாமை அரிசியைச் சேர்த்து வேக விடவும். பிரியாணி பதம் வந்ததும் எடுக்கவும்.

பலன்கள்: 

அனைத்துக் காய்கறிகளும் சேர்வதால், எல்லாச் சத்துக்களும் கிடைக்கின்றன. அதனுடன் சாமை சேர்வதால், நார்ச் சத்தும் கிடைத்து, உடல் வலுவைக் கூட்டுகிறது. காய்கறிகள், பட்டாணி சேர்ப்பதால், ஆரோக்கியம் கூடுகிறது.
Tags: