டேஸ்டியான உளுந்து சப்பாத்தி செய்வது எப்படி?





டேஸ்டியான உளுந்து சப்பாத்தி செய்வது எப்படி?

கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அந்த உளுந்தில் இருக்கும் முழுமையான சத்து ஜீரண உறுப்புகளால் கிரகிக்கப்பட்டு, செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 
டேஸ்டியான உளுந்து சப்பாத்தி செய்வது எப்படி?
மலம் கட்டிக் கொள்ளாமல் இலகுவாக வெளியேறவும் கருப்பு உளுந்து வழிவகை செய்கிறது. செரிமான திறனும் மேம்படுகிறது. 

உணவில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்பட்டால் பெரும்பாலான குழந்தைகளுக்கு அனிமீயா எனப்படும் ரத்த சோகை நோய் உருவாகிறது. கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. 
கருப்பு உளுந்தை கொண்டு செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ணக் கொடுப்பதால் ரத்த சோகை நோய்  விரைவில் தீரும்.

கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். 

கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த நார்ச்சத்து நாம் சாப்பிடும் எந்த வகையான உணவுகளிலும் இருக்கும் சத்துக்களை சரி செய்து, உடலின்  சர்க்கரை அளவை மிதமான அளவில் வைக்க உதவுகிறது. 
கருப்பு உளுந்தில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் சத்துகள் நிறைந்துள்ள ஒரு உணவாக இருக்கிறது. 

எனவே இந்த உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவை  குழந்தைகள் அடிக்கடி சாப்பிட செய்வதன் மூலம் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

கேரட் அல்வா உடலுக்கு எவ்வளவு சத்து தெரியுமா?

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 1 கப்

சோயாமாவு - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

பூரணத்துக்கு:

உளுந்து - 1/4 கப்

காய்ந்த மிளகாய் - 2

சோம்பு - 1/4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோதுமை மாவையும், சோயா மாவையும் உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் மிருதுவாக பிசைந்து கொள்ளவும். ஒரு மிளகாயுடன் உளுந்தை சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
உளுந்து சப்பாத்தி
நன்றாக ஊறியதும் சோம்பு, உப்பு, ஒரு மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை ஒரு கிண்ணத்தில் வைத்து, ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும், 

(ஒரு குச்சியை விட்டுப் பார்க்கும் போது மாவு ஒட்டாமல் வர வேண்டும்). பிறகு இந்த உளுந்து பூரணத்தை ஆற வைத்து உதிர்த்துக் கொள்ளவும். 

கடாய் காய்ந்ததும் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, உளுந்து பூரணத்தை சேர்த்துக் கிளறி இறக்கவும். பிசைந்து வைத்திருக்கும் மாவிலிருந்து சிறிது எடுத்து உருண்டை யாக்கி கிண்ணம் போல் செய்ய வேண்டும். 
உளுந்து பூரணத்தை அதில் நிரப்பி, உருட்டி மெல்லிய சப்பாத்தி களாக தேய்த்துக் கொள்ளவும். தோசைக் கல்லில் சுட்டெடுக்கவும். 

சப்பாத்திக்குள் வேக வைத்த உருளைக் கிழங்கை வைத்து செய்வதைத் தான் நாம் வழக்கமாக கொண்டுள்ளோம். 
ஆனால், இந்த சப்பாத்தியில் உளுந்து பூரணத்தை வைத்து செய்வதால், புரதச்சத்து அதிகமாகக் கிடைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான டிபன் இது
Tags: