வெஜ் இறால் ஸ்ப்ரிங் ரோல் செய்வது எப்படி?





வெஜ் இறால் ஸ்ப்ரிங் ரோல் செய்வது எப்படி?

இறால் மீன்களில் உள்ள மருத்துவ குணங்கள் தெரியுமா? அபார ருசியுடைய இந்த இறால் மீன்களை எப்படியெல்லாம் சமைக்கலாம் தெரியுமா? இறால் மீனில் உள்ள சத்துக்கள் அபரிமிதமானவை. 
வெஜ் இறால் ஸ்ப்ரிங் ரோல் செய்வது எப்படி?
கனிமச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. ஹீமோகுளோபினில் ஆக்ஸிஜன் கலக்கும் செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த கனிமம். 

இறாலில் அயோடின் சத்து நிறைய உள்ளதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க பேருதவி புரிகின்றன. இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது. 
இறாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன. பல வகை புற்றுநோய்களில் இருந்து காப்பதுடன், நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடும். 

இந்த இறாலில், வறுவல் செய்வார்கள், தொக்கு செய்வார்கள், இறால் 65 செய்வார்கள், பிரியாணி செய்வார்கள்.. அதே போல, மேலும் வகைகளிலும் இறாலை நாம் பயன்படுத்தலாம். 
குறிப்பாக கருணைக்கிழங்கை சேர்த்து கிரேவி போல செய்யலாம். கருணைக்கிழங்கை, சிறிதாக வெட்டிப்போட்டு, உப்பு சேர்த்து குக்கரில் 1 விசில் விட்டு எடுத்து கொள்ள வேண்டும். 

பிறகு, ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சோம்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

தேவையான பொருள்கள் :

கேரட், பீன்ஸ், பட்டாணிக் கடலை - ஒரு கப்

நறுக்கிய வெங்காயம் - 2

பச்சை மிளகாய்

இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

பொடியாக நறுக்கிய இறால் - 6 (அரைக்க வேண்டாம்)

உப்பு - 3/4 தேக்கரண்டி

ஸ்ப்ரிங் ரோல் ஷீட்ஸ் - சுமார் 15 - 20 ஷீட்

நறுக்கிய கொத்தமல்லி இலை - சிறிதளவு

கறிவேப்பிலை - 2 கொத்து

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு 
மஞ்சள் காமாலை வந்தால் என்ன செய்யலாம்?
செய்முறை : 

வெஜ் இறால் ஸ்ப்ரிங் ரோல்
கேரட், பீன்ஸ், பட்டாணிக்கடலை இவை மூன்றையும் பொடியாக நறுக்கி வேக வைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து

மேலும் வதக்கி காய்கறிகள், நறுக்கிய இறால் சேர்த்து கிளறி 10 நிமிடம் குறைந்த தீயில் உப்பு சேர்த்து மூடி வைக்கவும். வெந்ததும் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி சூடாற விடவும்.

இதனை ஸ்ப்ரிங் ரோல் ஷீட்டுகளில் 2 தேக்கரண்டி வைத்து மடக்கி இரு புறமும் உள்ளிழுத்து சுருட்டி பொரிக்கவும்.
Tags: