சுவையான பிஸ்கட் சாட் செய்வது எப்படி?





சுவையான பிஸ்கட் சாட் செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்று பிஸ்கட். ஆனால் இந்த பிஸ்கட்டுக்கள் நமது உடலுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுத்தும் என்பது தெரிந்தால், இனி சாப்பிட கொடுக்க மாட்டீர்கள். 
சுவையான பிஸ்கட் சாட் செய்வது எப்படி?
பிஸ்கட் தயாரிப்பின் போது அதிக வெப்ப நிலையில் எண்ணெய், டால்டா போன்றவற்றை சூடுபடுத்தும் போது உருவாகும். 

இந்த  டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை. 

இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்ந்தால் கொழுப்பின் அளவு அதிகமாகி இதயநோய்கள் உருவாகும் அபாயம் உண்டு. பிஸ்கெட் கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவும் சுவைக்காகவும் உப்பை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இவற்றை சாப்பிடுவது தேவையற்ற விளைவுகளையே உண்டாக்கும். 
இதைவிட சுவை, நிறம், பதப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காகப் பயன்படுத்துகிற சில வேதிப்பொருட்கள் தடை செய்யப் பட்டவையாகவும் இருக்கலாம். 

பிஸ்கட்டின் வேலையே பசியை அடக்குவதுதான். ஒரு குழந்தை மூன்று பிஸ்கட் சாப்பிட்டால், பசியே எடுக்காது. பெரும்பாலானவர்கள்,  குழந்தைக்குப் பாலில் நனைத்த பிஸ்கட்டைக் கொடுப்பார்கள். 

இது முற்றிலும் தவறான பழக்கம். க்ரீம் பிஸ்கட்டைக் கண்டிப்பாகத் தவிர்க்க  வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை மற்றும் மாலை நேர பிரேக்கில் சாப்பிட பிஸ்கட் கொடுத்தனுப்புகின்றோம். 

இதனால் மதிய உணவை முழுமையாகச் சாப்பிட முடியாமல் போகும். பிரேக்கில் பழங்களைச் சாப்பிடக் கொடுங்கள். இது பசியைத் தூண்டுவதுடன்,  கூடுதல் சத்துகளைக் கொடுக்கும்.
தேவையானவை:

உருளைக் கிழங்கு – 2,

ஏதாவது ஒரு பிஸ்கட் – ஒரு பாக்கெட்,

கிரீன் சட்னி – ஒரு டீஸ்பூன்,

ஸ்வீட் சட்னி – ஒரு டீஸ்பூன்,

சாட் மசாலா பொடி – ஒரு டீஸ்பூன்,

பொடியாக நறுக்கிய வெங்காயம் – தேவையான அளவு,

கேரட் துருவல் – சிறிதளவு,

ஓமப்பொடி (ஸ்நாக் வகை) – கால் கப்,

உப்பு, எலுமிச்சைச் சாறு – தேவையான அளவு.
செய்முறை:
சுவையான பிஸ்கட் சாட் செய்வது எப்படி?
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டு களாக்கி வைக்கவும். ஒரு தட்டில் உருளைக் கிழங்கு துண்டுகள், ஒன்றி ரண்டாக பொடித்த பிஸ்கட் துண்டுகள், 

கிரீன் சட்னி, ஸ்வீட் சட்னி, சாட் மசாலா பொடி, நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல், ஓமப் பொடி, உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
Tags: