டேஸ்டியான பிரெட் சாட் செய்வது எப்படி?





டேஸ்டியான பிரெட் சாட் செய்வது எப்படி?

உடல்நிலை சரியில்லை என்றால் அனைவரும் முதலில் பரிந்துரைப்பது பிரெட் தான். அதே போல் காலை உணவிற்காக பிரெட் டோஸ்ட், பிரெட் ஆம்லெட், பிரெட் ஜாம் என சாப்பிடுவார்கள். 
டேஸ்டியான பிரெட் சாட் செய்வது எப்படி?
வீட்டில் எதுவுமில்லை பசியை போக்க வேண்டுமெனில் பிரெட் இருந்தால் உடனே டோஸ்ட் செய்து சாப்பிடுவது என பிரெட் பல வீடுகளில் பல வகைகளில் உதவுகிறது. இதை எகிப்தியர்கள் தான் முதன் முதலில் உணவாக பயன்படுத்தியுள்ளனர். 

அன்று ஆரோக்கியமாக தயாரிக்கப்பட்டது. இன்றோ கார்போ ஹைட்ரேட் அதிகமாக சேர்ப்பதால் உடலில் கொழுப்பை அதிகரிக்கிறது. இதனால் டையட் பின்பற்றுவோர் முதலில் தவிர்க்கும் விஷயம் பிரெட் தான். 

அதே போல் பிரட்டுகளை கெட்டுப் போகாமல் நீண்ட நாட்களுக்கு வர அதைப் பதப்படுத்த சில உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை சேர்ப்பதாகவும், உப்பு, சர்க்கரை போன்றவை அதிகம் சேர்ப்பதால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்கின்றனர்.

இதில் அதிகமான கார்போ ஹைட்ரேட் கலப்படம் இருப்பதால் செரிமானிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் என்கின்றனர். 
அதே போல் தானியங்களான கோதுமை, ராகி போன்றவற்றில் செய்யப்படும் பிரெட்டுகளில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், இரும்புச் சத்து போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. 

ஆனால் வெள்ளையாக இருக்கும் பிரெட்டுகள் இப்படி எதுவுமே இல்லாததாக உள்ளது. சரி இனி பிரெட் பயன்படுத்தி டேஸ்டியான பிரெட் சாட் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  
தேவையானவை:

பிரெட்  ஸ்லைஸ்கள் – 4, 

உருளைக் கிழங்கு – ஒன்று, 

ஸ்வீட் சட்னி - ஒரு டீஸ்பூன், 

கிரீன் சட்னி - ஒரு டீஸ்பூன், 

சாட் மசாலா பொடி  - ஒரு டீஸ்பூன்,

எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், 

கொத்த மல்லி, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
டேஸ்டியான பிரெட் சாட் செய்வது எப்படி?
பிரெட்டின் ஓரங்களை நீக்கி விட்டு, துண்டு களாக்கி, எண்ணெயில் பொரிக்க வும். உருளைக் கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, துண்டு களாக்கவும்.
கொள்ளையனிடம் நகைகளை வாங்கி கொண்ட பிரபல நடிகை !
பொரித்த பிரெட், உருளைக் கிழங்கு துண்டுகள், ஸ்வீட் சட்னி, கிரீன் சட்னி, சாட் மசாலா பொடி, எலுமிச்சைச் சாறு, கொத்த மல்லி, உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
Tags: