குழம்பு வைத்து சாப்பிடுவதற்கு வறுத்து சாப்பிடுவதற்கும் ஏற்ற காய்கறி காலிபிளவர் ஆகும். வட இந்தியாவில் கோபி மஞ்சூரியன் பிரபலமான உணவாகும். கோபி என்றால் காலிபிளவர் என்று தமிழில் அர்த்தமாகும்.
தினமும் 90 கிராம் அளவுக்கு காலிபிளவர் சாப்பிடும் போது வைட்டமின் சி சத்து கிடைக்கிறது. காலிபிளவர் மூளையை போன்ற தோற்றம் உடையது. இது மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
காலிபிளவரில் உள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தும் உடலுக்கு உன்னதமான மருந்தாகிறது. புற்று நோய் உருவாவதை தடுக்குகிறது. நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் இல்லாது செய்கிறது.
காலிபிளவர் கருவில் உள்ள குழந்தையின் மூளை, முதுகுத்தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது. மூட்டு வலியை குறைப்பதில் காலிபிளவர் முக்கிய பங்கு வகிக்கிறது.
மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை இருப்பதால் இதில் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. காலிபிளவர் கருவில் உள்ள குழந்தையின் மூளை, முதுகுத்தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது.
மூட்டு வலியை குறைப்பதில் காலிபிளவர் முக்கிய பங்கு வகிக்கிறது. சரி இனி காலிபிளவர் பயன்படுத்தி டேஸ்டியான காலிபிளவர் ரோஸ்ட் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
தேவையானவை:
தோசை மாவு – 2 கப்,
சின்ன காலிஃப்ளவர் – ஒன்று,
பெரிய வெங்காயம்,
தக்காளி – தலா 2,
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ் பூன்,
தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்,
முந்திரி – 6,
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப),
கடுகு, பெருஞ்சீரகம் – தலா அரை டீஸ் பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
காலிஃப்ளவரை மிகவும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைக்கவும். பெரிய வெங்காயம், தக் காளியை மிகவும் பொடியாக நறுக்கவும்.
தேங்காய் துருவல் – முந்திரியை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருஞ்சீரகம் தாளித்து… பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு பொடியாக நறுக் கிய தக்காளி, காலிஃப்ளவர், இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, தேங்காய் – முந்திரி விழுது சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, அதன் மீது இந்த காலிஃப்ளவர் மசாலாவைத் தடவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு மடித்து எடுக்கவும்.
இதை ஆனியன் ராய்தா தொட்டு சாப்பிடலாம்.