அருமையான கிரீமி உருளைக்கிழங்கு சூப் செய்வது எப்படி?





அருமையான கிரீமி உருளைக்கிழங்கு சூப் செய்வது எப்படி?

உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும். 
அருமையான கிரீமி உருளைக்கிழங்கு சூப் செய்வது எப்படி?
அதிலிருக்கும் நார்ச்சத்துக்கள் உடலால் ஏற்றுக் கொள்ளப்பட்டு செரிமான உறுப்புகளின் சீரான இயக்கத்தைத் சரி செய்து, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. 

மேலும் உடலில் ஏற்படுகின்ற குடற்புற்று செல்களின் உற்பத்தி அதிகரிக்காமல் முற்றிலும் தடுக்கிறது. ரத்தத்தில் அதிக அளவு கொலஸ்ட்ரால் படிவதைத் தடுத்து இதய நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.
அதிக சக்தியை அளிக்கக் கூடிய உணவாகவும் அதே நேரத்தில் சுலபமாக செரிமானம் ஆகக்கூடிய ஒரு உணவு வகையாக உருளை கிழங்கு கருதப்படுகிறது. 

எனவே தான் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு உருளைக்கிழங்கு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
தேவையானவை:

உருளைக்கிழங்கு – 3,

நறுக்கிய பெரிய வெங்காயம் – 1,

கொத்த மல்லித் தழை – சிறிது,

நறுக்கிய தக்காளி – 1,

செலரி – சிறிதளவு, நறுக்கிய கேரட் – 1,

பால் – 100 மில்லி,

மிளகுத்தூள் – தேவையான அளவு,

எண்ணெய் – 2 டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
அருமையான கிரீமி உருளைக்கிழங்கு சூப் செய்வது எப்படி?
உருளைக்கிழங்கை வேக வைத்து மசிக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். அதனுடன் மசித்த கிழங்கைச் சேர்த்து வதக்கவும்.

பிறகு காய்ச்சிய பால், தேவையான தண்ணீர் சேர்த்து 3 நிமிடம் காய்களை வேக விடவும். பிறகு உப்பு, மிளகுத்தூள், செலரியைச் சேர்க்கவும். 

சூப் க்ரீமி பதம் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். கொத்த மல்லித் தழை கொண்டு அலங்கரிக்கவும்.
குறிப்பு: 

சூப்பை கொதிக்க விடாமல் மிதமான சூட்டில் தயார் செய்ய வேண்டும்.
Tags: