அருமையான பிரட் க்ரிஸ்பி செய்வது எப்படி?





அருமையான பிரட் க்ரிஸ்பி செய்வது எப்படி?

பொதுவாக பிரட் வெளிநாட்டவரால் நமது நாட்டில் அறிமுகப் படுத்தப்பட்ட ஒரு உணவு வகை என்ற போதிலும், நமது அன்றாட உணவுப் பழக்கத்தில் இதுவும் ஒன்றாகி யுள்ளது. 
அருமையான பிரட் க்ரிஸ்பி செய்வது எப்படி?
வொயிட் பிரட் போன்ற துரித உணவுகள் மைதா மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பிரட் காலை உணவாக எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான விஷயம்.

மாவையும், தண்ணீரையும் ஒன்றாக பிசைந்து பேக்கிங் (baking) செய்து தயாரிக்கப்படும் ஒரு உணவுப் பொருள் தான் பிரட். 

இது உலகப் பிரசித்தி பெற்ற மற்றும் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். பிரட்டை கொண்டு தயார் செய்யப்படும் பல உணவுப் பண்டங்களில் கார்போ ஹைட்ரேட் அதிகளவில் காணப்படும். 

ஒருவர் தினமும் பிரெட் சாப்பிடுவதால், அவருக்கு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள். பிரட் ஒரு நல்ல ஆற்றல் மூலமாகும் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளில் அதிகமாக உள்ளது. 

இது செரிமானத்தின் போது ஆற்றலை கொடுக்கிறது. பிரட்டில் அதிகப்படியான கலோரிகள் இருக்கின்றன. ஆனால் ஊட்டச்சத்துக்கள் மிக மிகக் குறைவாக உள்ளது. 

வெறும் வயிற்றில் பிரட் சாப்பிடுவது நல்லது கிடையாது இது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். சரி இனி பிரெட் கொண்டு அருமையான பிரட் க்ரிஸ்பி செய்வது எப்படி? என்று இன்றைய சமையலில் பாற்ப்போம்.
தேவையானவை:

பிரட் ஸ்லைஸ் – 10,

வெங்காயம் – 2,

தக்காளி – 3,

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,

கடுகு, பெருஞ்சீரகம் – தலா கால் டீஸ்பூன்,

மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப),

பொடியாக நறுக்கிய கொத்த மல்லித் தழை – சிறிதளவு, 

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:

பிரெட் க்ரிஸ்பிஸ்
பிரட் ஸ்லைஸ் களை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, பிரட் துண்டுகளை வறுத்து எடுத்து, தனியே வைக்கவும்.

லஸ்ஸி குடிப்பது ஆரோக்கியம் தருமா? என்ன நன்மைகள் தரும்?

பின்னர் வாணலியில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருஞ்சீரகம் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். 
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, உப்பு, இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறி. 

அதில் அரை கப் தண்ணீர் ஊற்றிச் சூடாக்கவும். ஒரு கொதி வந்ததும் வறுத்து வைத்துள்ள பிரட் துண்டுகள், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கிளறி, இறக்கவும். இது, லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்ப ஏற்றது.
Tags: