கோழிக்கறி பூண்டு மஞ்சூரியன் செய்வது எப்படி?





கோழிக்கறி பூண்டு மஞ்சூரியன் செய்வது எப்படி?

சிலருக்கு உடலில் சத்து குறைபாட்டாலும், வேறு சில காரணங்களாலும் எலும்புகள் வலுவிழப்பது, தேய்மானம் அடைவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. 
கோழிக்கறி பூண்டு மஞ்சூரியன் செய்வது எப்படி?
இத்தகைய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் கொஞ்ச காலத்திற்கு பூண்டு சேர்த்து செய்யப்பட்ட உணவுகளை அதிகம் உண்பது சிறந்தது. 

பூண்டு உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். 

ஏனெனில், இரத்த அழுத்தத்தில் நேர்மறையான விளைவைக் கொண்டிருப்பது கண்டறியப் பட்டுள்ளது.  நம் உடலில் எப்போதும் நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாகவும், கெட்ட கொலஸ்ட்ரால் குறைவாகவும் இருக்க வேண்டும். 
உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகளுக்கு கொலஸ்ட்ரால் அவசியம். உடலுக்குத் தேவையான கொலஸ்ட்ராலைத் தயாரிப்பது கல்லீரல். நாம் உண்ணும் உணவில் இருந்தும் கொலஸ்ட்ரால் கிடைக்கிறது. 

கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்ட்ரால் (HDL), கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) என இரு வகைகள் உள்ளன. 

பூண்டு உணவில் சேர்க்கப்படுவதால், (எல்.டி.எல்) கெட்ட கொழுப்பைக் குறைப்பதன் மூலமும், (எச்.டி.எல்) நல்ல கொழுப்பை அதிகரிப்பதன் மூலமும் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த பூண்டு உதவக்கூடும். 

பூண்டு சேர்த்துக் கொள்ளும் அதே வேளையில், புகைப்பிடிப்பதை தவிர்த்தல், உடல் எடையைக் குறைத்தல், ஒமேகா 3-யை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் நல்ல கொழுப்பை உயர்த்தலாம்.

தேவையானவை 
கோழிக்கறி - 1/2 கிலோ 

பூண்டு (பொடியாக நறுக்கியது) - 4 டீஸ்பூன் 

இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 2 டீஸ்பூன் 

வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது) 

மைதா - 2 டேபிள் ஸ்பூன் 

சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன் 

எலுமிச்சம் பழச்சாறு - சிறிதளவு 

சர்க்கரை - 1/4 டீஸ்பூன் 

முட்டை - 1 

சோயாசாஸ் - 2 டீஸ்பூன் 

அஜினோ மோட்டோ - 1 சிட்டிகை 

மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் 

உப்பு எண்ணெய் - தேவைக்கேற்ப 
செய்முறை 

கோழிக்கறி பூண்டு மஞ்சூரியன்
மைதா, சோளமாவு, அடித்த முட்டை, மிளகாய்த் தூள், மிளகுத்தூள், அஜினோ மோட்டோ, சோயா சாஸ், சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, போதுமான உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் திக்காக கரைக்கவும். 

கோழிக்கறி துண்டுகளை இந்த மாவுக் கலவையில் தோய்த்து, காய்ந்த எண்ணெயில் போட்டு இருபுறமும் நன்கு வெந்ததும் எடுத்து தனியே வைக்கவும். 

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி இவை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும். 
பொரித்த சிக்கனையும் இதில் சேர்த்துக் கிளறி, குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து கோழிக்கறி டிரை ஆனதும் இறக்கி விடவும்.
Tags: