சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பருப்பு வகைகளில் துவரை, பச்சை பயறு, மொச்சை, கடலை, உளுந்து, பட்டாணி ஆகியவை முக்கியமானவை. பயறு வகைகளில் மிகவும் சிறந்தது பச்சைப்பயறு.
இதில் நிறைய அளவு கலோரிகள் காணப்படுகிறன. பச்சைப்பயறில் புரதசத்து, நார்சத்து, கனிம உப்புக்களும் அதிக அளவில் காணப்டுகிறன. இதில் வைட்டமின் சி , ஏ ஆகியவையும் காணப்படுகின்றன.
பச்சை பயறில் அதிக வைட்டமின் உள்ளது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதால், ரத்த ஓட்டம் சீராகும். சர்க்கரை நோயின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது பச்சை பயறு.
உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.
பொட்டசியம், எலும்புகளுக்கு தேவையான கால்சியம், மாங்கனீசு போன்ற கனிம தாதுக்களும் நிறைந்து காணப்படுகின்றன. உடல் செரிமானத்திற்கு பாசிப்பயறு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இதில் காணப்படக்கூடிய நார்ச்சத்துக்கள் குடலின் உணவுகளை சீக்கிரமாக செரிமானமாக உதவிகரமாக உள்ளது.
தேவையானவை:
பச்சைப் பயறு, பச்சரிசி – தலா அரை கப்,
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் – தலா 2,
மிளகுத்தூள், சீரகத் தூள் – தலா கால் டீஸ்பூன்,
கொத்த மல்லித் தழை – சிறிதளவு,
நெய்யில் வறுத்த முந்திரி – 8,
பட்டை – சிறு துண்டு,
லவங்கம் – ஒன்று,
நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பச்சைப் பயிறு, பச்சரிசியை நன்கு கழுவி 2 கப் நீர் ஊற்றி ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
குக்கரில் எண்ணெய் – நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம் தாளித்து… வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, கொத்த மல்லித் தழை சேர்த்து மேலும் வதக்கவும்.
இதனுடன் ஊற வைத்த அரிசி – பயறை சேர்த்து குக்கரை மூடவும். பின்னர் நன்கு ஆவி வந்ததும் ‘வெயிட்’ போட்டு, அடுப்பை ‘சிம்’மில் வைத்து 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
குக்கரைத் திறந்து ‘பொலபொல’ வென இருக்கும் மணக்கும் சாதத்தின் மேல் மிளகுத் தூள், சீரகத்தூள், முந்திரி தூவி, ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, கிளறி இறக்கவும்.