சுவையான பச்சைப்பயறு கட்லெட் செய்வது எப்படி?





சுவையான பச்சைப்பயறு கட்லெட் செய்வது எப்படி?

பயறு வகைகளில் பெரும்பாலும் புரத சத்து, நார்சத்து நிறைந்து காணப்படுகின்றன. பயறு வகைகளில் மிகவும் சிறந்தது பச்சைப்பயறு. இதில் நிறைய அளவு கலோரிகள் காணப்படுகிறன.
சுவையான பச்சைப்பயறு கட்லெட் செய்வது எப்படி?
பச்சைப்பயறில் புரதசத்து, நார்சத்து, கனிம உப்புக்களும் அதிக அளவில் காணப்டுகிறன. இதில் வைட்டமின் சி, ஏ ஆகியவையும் காணப்படுகின்றன. இரும்புசத்து நிறைந்து காணப்படுவதால் இது உடலுக்கு மிகுந்த வலுவை சேர்க்கிறது.

பொட்டசியம், எலும்புகளுக்கு தேவையான கால்சியம், மாங்கனீசு போன்ற கனிம தாதுக்களும் நிறைந்து காணப்படுகின்றன. உடல் செரிமானத்திற்கு பாசிப்பயறு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 

இதில் காணப்படக்கூடிய நார்ச்சத்துக்கள் குடலின் உணவுகளை சீக்கிரமாக செரிமானமாக உதவிகரமாக உள்ளது. பாசிப்பயறு நோய் எதிர்ப்புசக்தியை அதிக அளவு கொடுக்கிறது. 
கர்ப்பிணி பெண்களுக்கு பாசிப்பயறு நன்கு சாப்பிடுவதால் அவர்களுக்கு இரும்புசத்து, புரதசத்து, நார்சத்து அதிக அளவு கிடைக்கிறது.

சரும பராமரிப்பில்  பாசிப்பயறு முக்கியமாக நிறைய பங்கினை தருகிறது. சருமத்தில் காணப்படக்கூடிய அழுக்குகளை நீக்கி முகம் பொலிவை தருகிறது. 

சரி இனி பச்சைப்பயறு பயன்படுத்தி சுவையான பச்சைப்பயறு கட்லெட் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையானவை:
உருளைக் கிழங்கு – ஒன்று,

முளை கட்டிய பச்சைப் பயறு – கால் கப்,

சாட் மசாலாத் தூள் – கால் டீஸ்பூன்,

பொடியாக நறுக்கி, வேக வைத்த கேரட், பீன்ஸ், கோஸ் (மூன்றும் சேர்த்து) – ஒரு கப்,

வேக வைத்த பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடி அளவு,

பொடியாக நறுக்கிய கொத்த மல்லித் தழை – சிறிதளவு,

பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்),

வறுத்துப் பொடித்த சீரகத்தூள் – அரை டீஸ்பூன்,

கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்,

சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன்,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
பச்சைப்பயறு கட்லெட்

உருளைக் கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் முளை கட்டிய பச்சைப் பயறை சேர்த்து வதக்கவும்.

பிறகு, பயறுடன் வேக வைத்த காய்கறிகள், பச்சைப் பட்டாணி, சீரகத்தூள், கரம் மசாலாத் தூள், பச்சை மிளகாய், கொத்த மல்லித் தழை, மசித்த உருளைக் கிழங்கு, சோள மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்துப் பிசைந்து, 
பொதுவான கண் பிரச்சனைகளும் சிகிச்சைகளும் !
சின்னச் சின்ன கட்லெட்டுகளாக தட்டி… தவாவில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கட்லெட்டுகளைப் போட்டு இரண்டு பக்கமும் பொன்னி றமானதும் எடுத்து, சாட் மசாலாவை லேசாகத் தூவி, சாப்பிடக் கொடுக்கவும்.
Tags: