ஹாட் அண்ட் ஸ்வீட் டோக்ளா செய்முறை / Hot and Sweet tocla !





ஹாட் அண்ட் ஸ்வீட் டோக்ளா செய்முறை / Hot and Sweet tocla !

தேவையானவை:

கடலை மாவு – 2 கப்,

சர்க்கரை – 2 டீஸ்பூன்,

எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்,

சமையல் சோடா – கால் டீஸ்பூன்,

பச்சை மிளகாய் – 4 (மிகவும் பொடியாக நறுக்கவும்),

பொடியாக நறுக்கிய கொத்த மல்லித் தழை – சிறிதளவு,
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,

கடுகு – 2 டீஸ்பூன்,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

ஹாட் அண்ட் ஸ்வீட் டோக்ளா

கடலை மாவுடன் 2 கப் தண்ணீர், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கட்டியில் லாமல் கரைக்கவும். சமையல் சோடா மாவில் வெது வெதுப்பான நீர் விட்டுக் கரைத்து அதை கடலை மாவுக் கரைசலில் ஊற்றி நன்கு கலக்கவும்.
இட்லித்தட்டில் எண்ணெய் தடவி, அதில் இந்த மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சூடாக இருக்கும் போதே விரும்பிய வடிவத்தில் துண்டுகள் போட்டு ஆறவிடவும். 

இது தான் டோக்ளா. சர்க்கரையை சிறிதளவு தண்ணீரில் கரைத்து, டோக்ளா மீது பரவலாக ஊற்றவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பச்சை மிளகாய் தாளித்து… தேங்காய் துருவல், கொத்த மல்லித் தழை கலந்து இறக்கி, இந்தக் கலவையை டோக்ளா மீது பரவலாகத் தூவவும்.
Tags: