டேஸ்டியான இட்லி மஞ்சூரியன் செய்வது எப்படி?





டேஸ்டியான இட்லி மஞ்சூரியன் செய்வது எப்படி?

தேவையானவை:

இட்லி – 5 அல்லது 6 (விரல் நீள துண்டுகளாக நறுக்கவும்), 

மைதா மாவு, கடலை மாவு – தலா ஒரு டேபிள் ஸ்பூன், 

சோள மாவு – ஒரு டீஸ்பூன், 

இஞ்சி – பூண்டு விழுது, 

மிளகாய்த் தூள் – தலா ஒரு டீஸ்பூன், 

சோயா சாஸ், க்ரீன் சில்லி சாஸ், டொமேட்டோ சாஸ் – தலா ஒரு டீஸ்பூன், 

கேசரி கலர் – ஒரு சிட்டிகை, 

பொடியாக நறுக்கிய கொத்த மல்லித்தழை – சிறிதளவு, 

எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

செய்முறை :

இட்லி மஞ்சூரியன்

கடலை மாவு, மைதா மாவு, சோள மாவு, இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, மிளகாய்த் தூள், கேசரி கலர், சோயா சாஸ், க்ரீன் சில்லி சாஸ், டொமேட்டோ சாஸ் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து, கெட்டியாக கரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் இட்லித் துண்டுகளை மாவுக் கரைசலில் முக்கியெடுத்து, எண்ணெயில் போட்டு பொரித் தெடுக்கவும். 

மேலே பொடியாக நறுக்கிய கொத்த மல்லித் தழையைத் தூவவும். இதற்கு தக்காளி சாஸ் தொட்டு சாப்பிட்டால்… சுவை அபாரமாக இருக்கும்.
Tags: