காய்கறிகள் தாதுப்பொருட்கள் உயிர்சத்துக்கள் ஆகியவற்றிற்கான மூலாதாரங்கள் நிறையப் பெற்றுள்ளன. சக்தி அளிக்கும் மாவுப் பொருட்கள் புரதம் நிறைய உள்ளன.
மனித உடல் வளர்ச்சிக்கும், உடல் நலத்திற்கும் குறைந்தது 10 தாது பொருட்கள் வேண்டும். காய்கறிகளில் இவைகள் நிரம்ப உள்ளன.
உயிர்ச்சத்து ஏ பி சி டி நிறைய காய்கறிகளில் இருக்கிறது. நல்ல உடல் நலத்திற்கு நம் உடலின் சுண்ணாம்புக்கார இருப்பை வைத்திருப்பது மிக அவசியம்.
இறைச்சி, பால் பொருட்கள், முட்டை இந்த இருப்பைக் குறைத்து விடும். ஆனால் காய்கறி இதை அதிகரிக்கும். சரி இனி காய்கறி கொண்டு சுவையான அருமையான வெஜிடபிள் ஜால்ப்ரெஸி செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
மிக்ஸ்ட் வெஜிடபிள்ஸ் - 300 கிராம் (கேரட், பீன்ஸ், உருளைக் கிழங்கு, பச்சை பட்டாணி, காளிப்ளவர்)
கொடை மிளகாய் -1
வெங்காயம் - 2
தக்காளி - 2
மல்லி இலை- சிறிது
எண்ணெய் அல்லது
பட்டர் - 3 டேபிள் ஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன் (விரும்பினால்)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
மல்லித் தூள் - 1டேபிள் ஸ்பூன்
மிளகாய்த் தூள் - அரை -1 டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் காய்கறிகளை நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். அதில் உப்பு மஞ்சள் தூள் போட்டு தண்ணீர் சேர்த்து அரை வேக்காட்டில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், இஞ்சி-பூண்டு பேஸ்ட், வெங்காயம் சேர்த்து வதக்கவும். அத்துடன் வேக வைத்த காய்கறி, தக்காளி, உப்பு சேர்த்து மீண்டும் வதக்கவும்.
பின்னர், நறுக்கிய கொடை மிளகாய் சேர்த்து கிளறவும். ஜால்ப்ரெஸிக்கு தேவையான முக்கிய பொருள் கொடை மிளகாய் என்பது குறிப்பிடத் தக்கது.
இதன் பின்னர் மல்லித் தூள், மிளகாய்த் தூள், சீரகத் தூள், சேர்த்து அரைகப் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.
மசாலா வாடை அடங்கியதும் கிரேவி கெட்டியான பதத்திற்கு வந்து விடும். உப்பு சரி பார்த்து மல்லி இல்லை தூவி இறக்கி பரிமாறவும். சுவையான வெஜிடபிள் ஜால்ப்ரெசி தயார்.