அரிசியை கொண்டு அழகுபடுத்தி கொள்ளலாம் என்பது வீட்டிலிருந்து அழகு படுத்தி கொள்ள நினைப்பவர்களுக்கு ஓர் வரபிரசாதம்.
இயற்கை மருத்துவம், இயற்கை அழகு என்று விரும்புபவர்கள் பெரும்பாலும் வீட்டிலிருக்கும் பொருள்களை கொண்டு பராமரிக்கவே விரும்புவார்கள். இதற்கு முன்பே அரிசி கழுவிய நீர் குறித்து பார்த்திருக்கிறோம்.
அதே போன்று அரிசி மாவும் சருமத்துக்கும் பலவிதமான நன்மைகளை தருகிறது. உடலில் இருக்கும் ஸ்ட்ரெச் மார்க் விரட்டி அடிக்க அரிசி மாவு உதவும்.
பிரசவத்தினால் உண்டாகும் தழும்பு, உடல் எடை அதிகமானவர்கள் வேகமாக உடல் எடையைக் குறைக்கும் போது உண்டாகும் தழும்பு போன்றவை உடலில் எங்கு இருந்தாலும் தனியாக தெரியும். அதை போக்க அரிசி மாவு உதவும்.
அரிசிமாவுடன் மஞ்சள் தூள், காய்ச்சாத பசும் பால் சேர்த்து பேஸ்ட் போல் குழைக்கவும். இதை ஸ்ட்ரெச் மார்க் இருக்கும் இடங்களில் தடவி விடவும். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
வயிற்றில் போடுபவர்கள் தினமும் குளிப்பதற்கு அரைமணி நேரம் முன்பு இதை தடவி பிறகு குளிக்கலாம். தினமும் இதை பயன்படுத்தி வந்தால் விரைவில் தழும்புகள் மறைந்து சருமம் சீராக மாறும்.
பலாக்கொட்டை மாங்காய் அவியல் செய்வது எப்படி?
தேவையானவை:
அரிசி மாவு – ஒரு கப்,
மோர் – 2 கப்,
சின்ன வெங்காயம் – 8 (பொடியாக நறுக்கவும்),
மிளகுத் தூள், சீரகம் – தலா அரை டீஸ்பூன்,
நறுக்கிய கொத்த மல்லித் தழை – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
அகலமான வாணலியில் மோரை ஊற்றி (அடுப்பை ‘சிம்மி’ ல் வைத்து) லேசாக சூடு பண்ணவும். அதனுடன் மிளகுத் தூள், சீரகம், உப்பு ஆகிய வற்றை சேர்க்கவும்.
பிறகு அரிசி மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறிக் கொண்டே இருக்கவும். இதில் சின்ன வெங்காயம், கொத்த மல்லித் தழை சேர்த்து, கலவை சற்று கெட்டியான பதம் வரும் வரை கிளறவும்.
பின்னர் அடுப்பை அணைத்து விட்டு மாவை இறக்கி சிறிது நேரம் ஆற விடவும்.
கையில் எண்ணெய் தொட்டு, செய்து வைத்த கலவையை சிறு சிறு உருண்டை களாக உருட்டி, சூடான எண்ணெயில் பொன்னிற மாக பொரிக்கவும்.
இதற்கு தொட்டுக் கொள்ள டொமேட்டோ கெட்சப் ஏற்றது.