வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல் தான் பலர் வீடுகளில். அசைவ உணவு மற்றும் கடல் உணவு வகையான மீனை வழக்கமாக பொரித்து, புட்டு அல்லது குழம்பு வைத்து சாப்பிட்டு இருப்போம்.
மீனின் கமகம வாசனைக்கு எப்படி செய்தாலும் ருசியாகத் தான் இருக்கும். பொதுவாக பொரித்த மீன் என்று சொல்லப்படும் போது கடாயில் எண்ணெய் ஊற்றி டீப் ஃபிரை செய்து தான் பொரித்து சாப்பிட்டு இருப்பீர்கள்.
ஆனால் இன்று நாம் செய்ய உள்ள லெமன் ஃபிஷ் ஃபிரை ரெசிபியை மசாலாவில் வைத்து வேக வைத்து சமைக்க உள்ளோம். எண்ணெய் இல்லாமல் சமைப்பதால் அனைவருக்கும் ஏற்ற ஒரு ரெசிபி என்று கூறலாம்.
இதன் சுவை தாறுமாறாக இருப்பதால் இனி மீன் வாங்கினால் இப்படி தான் செய்து தர வேண்டும் என்று வீட்டில் உள்ளவர்கள் கூறுவார்கள். மசாலாவின் மணத்தோடு மீனின் வாசனையும் சேர்ந்து இந்த ரெசிபியை மேலும் சுவை சேர்க்கும். இதோ...
வாய்க்கு ருசியாக சாப்பிட வந்து விட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான லெமன் ஃபிஷ் ஃப்ரை.
அப்படியான இந்த லெமன் ஃபிஷ் ஃபிரை ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள உள்ளோம்.
தேவையானவை:
மீன் துண்டுகள் - அரை கிலோ
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 50 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
கரம் மசாலாத் தூள் - அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
வெயில் கால தலைவலிக்கு காரணங்கள் !
மீனை ஊற வைப்பதற்கு:
எலுமிச்சைச் சாறு - அரை டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
மீனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து அதிலிருக்கும் நீரை வைத்துக் கொள்ளவும். மீனை ஊற வைக்க கொடுக்கப் பட்டுள்ள பொருட்களை கலந்து அதனுடன் மீன் துண்டுகளைச் சேர்த்து நன்கு பிரட்டி 15 நிமிடங்கள் ஊற விடவும்.
அடுப்பில் அடிகனமான பரந்த பேனை வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
அதனுடன் மிளகுத் தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி விட்டு, கலவையை பேனில் சமமாக பரப்பி அதன் மேல் மீன் துண்டுகளை வைத்து சிறு தீயில் வேக விடவும்.
விண்வெளி பயணம் உயிருக்கு ஆபத்தானதா?
மீன் ஒரு புறம் வெந்தவுடன் திருப்பிப் போட்டு மறுபுறமும் வேக விட்டு இறக்கவும். மீனுடன் மசாலாக் கலவையும் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
லெமன் ஃபிஷ் ஃப்ரை, சாதத்துடன் சாப்பிட சுவையான சைடு டிஷ்.