அருமையான மட்டன் தோ பியாஸ் செய்வது எப்படி?





அருமையான மட்டன் தோ பியாஸ் செய்வது எப்படி?

உடலுக்கு கெடுதி என்றே மட்டனை தூரமாக ஒதுக்கி வைத்து விடுகிறோம்.. ஆனால், ஆட்டிறைச்சியில் நிறைய சத்துக்கள் இருக்கின்றன என்பதையும் மறுத்துவிட முடியாது. 
மட்டன் தோ பியாஸ்
இருதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள், மட்டன் பக்கமே வரக்கூடாது. இதில், எந்தவிதமான மாற்றமும் கிடையாது. 

அதே சமயம், நல்ல உடல்நல ஆரோக்கியம் உள்ளவர்கள், மாதம் 1 முறையாவது, குறிப்பிட்ட அளவு ஆட்டிறைச்சியை உணவில் எடுத்து கொள்ளலாம். 

அந்த வகையில், செம்மறி ஆட்டுக்கறி, வெள்ளாட்டுக்கறி என்று 2 வகையான இரண்டு வகையான மட்டன்கள் இருந்தாலும், 100 கிராம் செம்மறி ஆட்டில் 300 கலோரிகள் உள்ளன. 
20 கிராம் கொழுப்பு, புரோட்டீன் 25 கிராமும், கொலஸ்டிரால் 100 மி.கிராமும் உள்ளன. 100 கிராம் வெள்ளாட்டு கறியில், 130 கலோரிகளும், 3 கிராம் கொழுப்பு, 27 கிராம் புரோட்டீன் உள்ளன. 

எனவே, வெள்ளாட்டுக்கறி சிறந்தது என்றாலும், இருவகை இறைச்சியிலுமே இரும்பு, துத்தநாகம், வைட்டமின் B12 சத்துக்கள் ஒரே மாதிரியாகவே உள்ளன. 
அதற்காக இந்த கறியையும் அதிகமாக சாப்பிடக் கூடாது. எப்போதுமே மட்டன் சமைக்கும் போது, குறைவான எண்ணெய், வேக வைத்து, கிரில் செய்து சாப்பிடலாம். 

அல்லது மிளகு தூள் சேர்த்து, சூப் போல சாப்பிட்டால். வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல் தான் பலர் வீடுகளில். இதோ. 

வாய்க்கு ருசியாக சாப்பிட வந்து விட்டது வீக் எண்ட்.மட்டன் தோபியாஸ் செய்ய நீங்க ரெடியா! பேரே வித்தியாச மாக இருக்கிறதா.  சுவையும் அப்படித் தான். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க,

அசத்தலான மட்டன் தோ பியாஸ் அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் பேராசிரியர் ஜெயலஷ்மி.
முதுகு வலி ஏற்படுவது எதனால்? எப்படி போக்குவது !
செய்ய தேவையானவை:

மட்டன் - அரை கிலோ

பெரிய வெங்காயம் - 125 கிராம் (நீளவாக்கில் நறுக்கியது)

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 50 கிராம்

கொத்த மல்லித் தழை - தேவையான அளவு

விழுதாக அரைக்க: 

காய்ந்த மிளகாய் - 10 கிராம்

முழு மல்லி (தனியா) - 15 கிராம்

இஞ்சி - 15 கிராம்

பூண்டு - 10 பல்

சின்ன வெங்காயம் - 125 கிராம்

தண்ணீர் - சிறிதளவு

செய்முறை: 
மட்டனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்நிறமாக வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்பு அதே கடாயில் விழுதாக அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து நன்கு வதக்கவும். எண்ணெய் மசாலாவி லிருந்து பிரிந்து வரும்போது மட்டனைச் சேர்த்து வதக்கவும்.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவா?
பின்பு அதனுடன் வறுத்து வைத்தி ருக்கும் வெங்காயம் மற்றும் உப்பு, தேவையான அளவு வெந்நீர் சேர்த்துக் கலக்கி விட்டு மூடி வைத்து வேக விடவும்.

மட்டன் நன்கு வெந்து கிரேவி கெட்டியா னவுடன் அடுப்பி லிருந்து இறக்கி, கொத்த மல்லித் தழை தூவி சூடாகப் பரிமாறவும்.
Tags: