சுவையான ஓட்ஸ் கேழ்வரகு ரொட்டி செய்வது எப்படி?





சுவையான ஓட்ஸ் கேழ்வரகு ரொட்டி செய்வது எப்படி?

பதப்படுத்தப்பட்ட ஓட்ஸை, நன்றாக அரைத்து பொடி செய்து, அதனை தனியாகவோ அல்லது மற்ற மாவுகளுடன் சேர்த்தோ பயன்படுத்தப்படுகிறது. ஓட்ஸில் உள்ள நார்ச்சத்தில் லிப்பிட் கொழுப்பை குறைக்கும் நன்மைகள் உள்ளது. 
சுவையான ஓட்ஸ் கேழ்வரகு ரொட்டி செய்வது எப்படி?
இதிலுள்ள கரையத்தக்க நார்ச்சத்து, கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, கொலஸ்ட்ராலை உங்கள் குடல் உறிஞ்சுவதையும் குறைக்கும். கூடுதலாக, ஓட்ஸில் அவெனாந்த்ரமைட் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. 

இது LDL விஷத்தன்மைக்கு எதிராக பாதுகாக்கும். கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்ற பல நோய்கள் உடலை அணுகாதவாறு பார்த்துக்  கொள்ளலாம். 

உடலைக் குளிர்ச்சியாக்கும். உடலுக்கு வலுவையும் தரும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு அரு மருந்து. அரிசி சாதத்துக்குப் பதிலாக இந்தக் கூழைக் குடித்து வந்தால், விரைவாக எடை குறையும். 

கேழ்வரகில் உள்ள தாவர வகை இரசாயன கலவைகள் செரிமானத்தை குறைக்கின்றன. இது நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. 

எனவே நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. சரி இனி சுவையான ஓட்ஸ் கேழ்வரகு ரொட்டி செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

எல்லக்கட்டி கோழி பிரியாணி செய்வது எப்படி?

தேவையானவை:

ஓட்ஸ், கேழ்வரகு மாவு – தலா ஒரு கப்,

மிளகாய்த் தூள் – கால் டீஸ்பூன்,

பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் – தலா ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்),

கேரட் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்,

தேங்காய் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்,

பொட்டுக் கடலை மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்,

பொடியாக நறுக்கிய கொத்த மல்லித் தழை – சிறிதளவு,

தயிர் – ஒரு டேபிள் ஸ்பூன்,

நெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:
சுவையான ஓட்ஸ் கேழ்வரகு ரொட்டி செய்வது எப்படி?

கேழ்வரகு மாவு, ஓட்ஸுடன் நெய்யைத் தவிர எல்லா பொருட் களையும் சேர்த்து சிறிதளவு நீர் விட்டுக் கலந்து நன்கு பிசையவும். 

கொஞ்சம் மாவை எடுத்து சிறு உருண்டயாக்கி, வாழையிலை (அ) பிளாஸ்டிக் கவரில் நெய் தடவி, அதன் மீது உருண்டையை வைத்து ரொட்டியாக தட்டவும்.

தோசைக் கல்லின் மீது நெய் தடவி, ரொட்டியைப் போட்டு, சுற்றிலும் நெய் விட்டு, திருப்பிப் போட்டு எடுக்கவும். இதற்கு, ஃப்ரூட் ஜாம் பெஸ்ட் காம்பினேஷன்.
Tags: