அருமையான பன்னீர் வெஜ் ரோல்ஸ் செய்வது எப்படி?





அருமையான பன்னீர் வெஜ் ரோல்ஸ் செய்வது எப்படி?

அசைவ உணவு சாப்பிடாதவர்களுக்கு மிகச்சிறந்த உணவாக பன்னீர் மாறி விட்டது. ஏனெனில் இறைச்சியை கொண்டு சமைக்கக்கூடிய அனைத்து விதமான உணவுகளையும் பன்னீர் கொண்டு நாம் சமைக்கலாம். 
அருமையான பன்னீர் வெஜ் ரோல்ஸ் செய்வது எப்படி?
அது மட்டுமின்றி பன்னீரை அதிக குழந்தைகள் விரும்பி உண்ண தொடங்கி யுள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் இந்த பன்னீர் பல ஆரோக்கிய கேடுகளையும் சேர்த்தே உருவாக்கும் என்பது பலரும் அறியாத ஒன்று. 

எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் அவசியமான சத்தாகும். பன்னீரில் அதிகளவு கால்சியம் உள்ளது. 
எனவே பன்னீர் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளப்படுவதால் பற்களின் ஆரோக்கியம் அதிகரிப்பதுடன் எலும்புகள் வலுவடைகிறது. இதில் லேக்ட்டோஸ் குறைவாக உள்ளதால் பற்கள் சொத்தையாவது தடுக்கப் படுகிறது. 

பன்னீரில் அதிகளவு கொழுப்பு உள்ளது. ஏற்கனவே கொழுப்பு உள்ளவர்கள் பன்னீர் சாப்பிடும் போது துஆ அவர்கள் கொழுப்பின் அளவை உடனடியாக அதிகரிக்கும். இதனால் உச்சகட்டமாக மாரடைப்பு வரை கூட ஏற்படலாம். 
எனவே கொழுப்பு உள்ளவர்கள் பன்னீர் சாப்பிடாமல் இருப்பதே நல்லது. சிலருக்கு பால் பொருட்களால் அலர்ஜிகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. 

அப்படிப் பட்டவர்கள் பன்னீரை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது பாலை காட்டிலும் அதிகளவு அலர்ஜிகளை ஏற்படுத்தக் கூடும்.

தேவையானவை:

சப்பாத்தி – 8,

துருவிய பன்னீர் – 200 கிராம்,

குடமிளகாய், பெரிய வெங்காயம் – தலா ஒன்று,

வெங்காயத்தாள் – 4,

சீரகத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,

ஆம்சூர் பொடி – கால் டீஸ்பூன்,

கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,

பொடி யாக நறுக்கிய கொத்தமல்லித் தழை – சிறிதளவு,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:

பனீர் வெஜ் ரோல்ஸ்
குடமிளகாய், பெரிய வெங்காயம், வெங்காயத் தாள் ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலி யில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் முதலில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு குடமிளகாய், கேரட் துருவல் சேர்த்து வதக்கவும். துருவிய பனீரை அதனுடன் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அதில் சீரகத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி… 

கொத்தமல்லித் தழை, ஆம்சூர் பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கினால்… ஃபில்லிங் ரெடி.
ராஜ்தானி எக்ஸ்பிரஸ் பற்றி அறிந்திராத சுவாரஸ்யங்கள் !
சப்பாத்தி யின் நடுவில் இந்த ஃபில்லிங்கை நீளவாக்கில் நிரப்பி, பொடியாக நறுக்கிய வெங்காயத் தாளை மேலே தூவி நன்கு இறுக்கமாக சுருட்டி, அலுமினிய பாயில் (அ) பட்டர் பேப்பரில் வைத்து சுருட்டி… லஞ்ச் பாக்ஸில் போட்டு கொடுத்து அனுப்பலாம்.
Tags: