சுவையான குயிக் வெஜ் புலாவ் செய்வது எப்படி?





சுவையான குயிக் வெஜ் புலாவ் செய்வது எப்படி?

பச்சை பட்டாணியில் அதிகளவு ஸ்டார்ச் அதாவது கார்போஹைட்ரேட் அதிகளவில் உள்ளது. இது கலோரிகள் குறைந்த ஒன்று என்றாலும் இதில் நார்ச்சத்து, புரோட்டீன், விட்டமின் ஏ மற்றும் விட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
குயிக் வெஜ் புலாவ்
பச்சை பட்டாணியில் மாங்கனீஸ், இரும்புச் சத்து, போலேட் மற்றும் தயமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதன் அதிகமான நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. 

பச்சை பட்டாணி சீரண சக்திக்கு உதவுகிறது. குடலில் நல்ல பாக்டீரியாவை அதிகரித்து குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதன் நார்ச்சத்தால் மலச்சிக்கல் பிரச்சினையை போக்குகிறது. 
இதய நோய்க்கு காரணமான கெட்ட கொழுப்பினை இக்காயில் உள்ள விட்டமின் பி3(நியாசின்) தடைசெய்கிறது. இக்காயில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிஜென்டுகள் இதய இரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை தடை செய்கிறது. 

பச்சை பட்டாணியில் உள்ள பொட்டாசியமானது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. எனவே பச்சை பட்டாணி சூப்பினை அருந்தி சீரான இரத்த அழுத்தத்துடன் இதய நலத்தைப் பாதுகாக்கலாம்.
 
பச்சை பட்டாணியில் காணப்படும் இரும்பு சத்து மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன.
தேவையானவை:

பாசுமதி அரிசி – 2 கப், 

பால் – 2 கப், 

பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் (இரண்டும் சேர்த்து) – ஒரு கப், 

பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடி அளவு, 

வெங்காயம், பச்சை மிளகாய் – தலா 2, 

இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன், 

பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை – தலா ஒன்று, 

பொடியாக நறுக்கிய கொத்த மல்லித் தழை – சிறிதளவு, 

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
மழைக் காலத்தில் பரவும் நோய்கள் என்ன?
செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாயை நீள நீளமாக நறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து… 
வெங்காயம், பச்சை மிளகாய், கொஞ்சம் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து மேலும் நன்கு வதக்க வும்.

இதனுடன் பால், தண்ணீர் ஒரு கப், பாசுமதி அரிசி, தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறி, குக்கரை மூடவும். 
கால்சியம் குறை பாட்டினால் வரக்கூடிய வலிகள் !
பின்னர் நன்கு ஆவி வந்ததும் ‘வெயிட்’ போட்டு, அடுப்பை ‘சிம்’மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கி.. பொடியாக நறுக்கிய கொத்த மல்லித் தழை தூவி, பரிமாறவும்.
Tags: