மார்கழி மாதம் தொடங்கியதில் இருந்து பகல் பொழுதில் கூட ஜில்லென்ற காற்று வீசிக் கொண்டிருக்கிறது. இந்த குளிர்காலம் மிகக் குளுமை யானதாகவும், இனிமை யானதாகவும் இருக்கின்றது.
இத்தகைய தருணத்தில் காய்கறிகளும், கீரைகளும் கூட பச்சை, பசேலென்று புத்தம், புதிதாக விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. சைவ உணவுகளில் கீரைகளுக்கு கொடுக்கப் படுகின்ற முக்கியத்துவம் வேறெந்த காய்கறிக்கும் பொருந்தாது.
கீரைகள் சுவையிலும் சூப்பராக இருக்கும் என்பதுடன், அதிகப் படியான ஊட்டச் சத்துக்கள், மினரல்கள் போன்றவற்றை கொண்டிருக்கின்றன.
எனவே உடல் எடையை குறைக்க உதவும் ஆரோக்கியமான டயட்டில் தவறாது இடம் பெறுவதில் கீரை வகைகளுக்கு எப்போதுமே முக்கிய பங்கு உண்டு.
விட்டமின் ஏ, சி மற்றும் இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்தது அரைக்கீரை ஆகும். இதில் நார்ச்சத்து மிகுதியாக இருக்கும். அது நம் உடலில் நீண்ட நேரம் பசி உணர்வை கட்டுப்படுத்தும்.
கீரைகளின் அரசன் என்று பாலக்கீரையை குறிப்பிடுகின்றனர். இதில் புரதசத்து, நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து போன்றவை இருக்கின்றன.
நம் வீட்டு தோட்டத்தில் காலியாக உள்ள இடத்தில் இந்த கீரையின் தண்டுகள் ஒன்றிரண்டை நட்டு வைத்தால் போதும். கூடிய விரைவில் கீரை தோட்டம் தானாகவே உருவாகி விடும்.
சரி இனி முருங்கைக் கீரை பயன்படுத்தி ருசியான கீரை சாட் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
தேவையானவை:
முருங்கைக் கீரை – ஒரு கட்டு,
உருளைக்கிழங்கு – 4,
வேர்க்கடலை – கால் கப்,
சாட் மசாலா பொடி,
ஸ்வீட் சட்னி – தலா ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – சிறிதளவு,
கொத்த மல்லி,
ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை),
கேரட் துருவல், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
முருங்கைக் கீரையை சுத்தம் செய்து, ஆய்ந்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். உருளைக் கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, துண்டுகள் செய்யவும். வேர்க் கடலையை வறுக்கவும்.
கீரை, உருளைக் கிழங்கை ஒன்று சேர்த்து… வேர்கடலை, சாட் மசாலா பொடி, ஸ்வீட் சட்னி, எலுமிச்சைச் சாறு, கொத்த மல்லி, ஓமப்பொடி, கேரட் துருவல், உப்பு சேர்த்து சாப்பிடலாம்.
முருங்கைக் கீரையில் இரும்புச் சத்து நிறைந்து உள்ளதால், அனைத்து வயதினருக்கும் ஏற்ற சாட் இது !