சுவையான ஸ்வீட் சட்னி செய்வது எப்படி?





சுவையான ஸ்வீட் சட்னி செய்வது எப்படி?

பேரீச்சம் பழத்திலுள்ள பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகின்றன. 
சுவையான ஸ்வீட் சட்னி செய்வது எப்படி?
இதில் உள்ள இரும்புச்சத்து, வைட்டமின் சி, பி6 போன்றவை இரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவை சீராக்க உதவுகின்றன. இதனால்  இரத்தசோகை பிரச்சனைக்கு நல்ல தீர்வு காணலாம். 

ஊட்டசத்துக்களின் களஞ்சியமான பேரீச்சம் பழத்தில், புரதம், துத்தநாகம், கார்போஹைட்ரேட், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. 

குளிர் காலத்தில் தினமும் 4-5 பேரீச்சம் பழங்களை சாப்பிடுவதன் மூலம் உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். பேரீச்சம் பழத்தில் அதிக அளவில்  பொட்டாசியம் உள்ளது. 
இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.  தினமும் 4 பேரீச்சம்பழங்களை உட்கொண்டால் போதும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கலாம். 
பேரீச்சம் பழத்தில் அதிக அளவில்  பொட்டாசியம் உள்ளது, இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.  தினமும் 4 பேரீச்சம் பழங்களை உட்கொண்டால் போதும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கலாம்.

சரி இனி பேரீச்சம்பழம் உலர் திராட்சை பயன்படுத்தி சுவையான ஸ்வீட் சட்னி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையானவை: 

பேரீச்சம்பழம் – 10, 

புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, 

காய்ந்த மிளகாய் – 4, 

சீரகம் – ஒரு டீஸ்பூன், 

வெல்லம் – சிறிதளவு, 

உலர் திராட்சை – 10, 

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
ஸ்வீட் சட்னி

பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி விட்டு, புளி, காய்ந்த மிளகாய், சீரகம், வெல்லம், உலர் திராட்சை, 
ஹைப்பர் லூப் அதிவேக வளையப் போக்குவரத்து !
உப்பு சேர்த்து தளர அரைத்து, வடிகட்டி, கொதிக்க விட்டு, கெட்டியான பின்பு இறக்கவும். பரிமாறும் போது நீர்க்க கரைத்து பயன் படுத்தலாம்.
Tags: