ஸ்வீட் கார்ன் என்பது கார்போஹைட்ரேட் நிறைந்தது. இது இரத்த சர்க்கரையை அதிகரிக்கலாம் என்பதால் தவிர்க்க வேண்டும் என்று பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இதை நீங்கள் அகற்ற வேண்டும் என்பது இல்லை.
இதில் சோடியம் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளது. அடக்கமான இனிப்பு சோளம் சுவையுடன் ஊட்டச்சத்தை அளிக்கிறது.
இதில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கார்போ ஹைட்ரேட் அளவு இருந்தாலும் இது வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் சிறந்த மூலமாக பார்க்கப்படுகிறது.
இது நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது. சோளத்தை வேகவைக்கும் போது அதன் கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவானது 52 குறியீடு அளவு உள்ளது.
அதனால் இது செரிமானத்தின் போது உடலில் படிப்படியாக உடைந்து இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸை மெதுவாக வெளியிடுகிறது. ஸ்வீட் கார்ன் சாப்பிடுவது சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் என்றாலும் மிதமான அளவில் உட்கொள்ளும் போது இவை நன்மை பயக்கும்.
அதனால் தினசரி அளவை கண்காணிக்க வேண்டும். ஏனெனில் இது உடலுக்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு குளுக்கோஸ் அளவையும் குறிப்பிட்ட அளவு உயர்த்துகிறது.
உடலுக்கு வைட்டமின், தாதுக்கள் மற்றும் ஆற்றலை அளிக்கிறது. இது ஆரோக்கியத்தை பாதிக்காது என்பதால் மிதமாக சிறிய அளவு உட்கொள்ளலாம்.
தேவையானவை:
பாசுமதி அரிசி – ஒரு கப்,
வேக வைத்த கார்ன் – அரை கப்,
வெங்காயம் – ஒன்று,
தக்காளி – 3,
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய புதினா, கொத்த மல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி அளவு,
மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்,
தேங்காய்ப் பால் – அரை கப்,
பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று,
எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு,
மழைக் காலத்தில் பரவும் நோய்கள் என்ன?
செய்முறை:
வெங்காயத்தை நீள நீளமாக நறுக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். அரிசியுடன் தேங்காய்ப் பால், ஒன்றேகால் கப் தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்.
குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், லவங்கம் தாளித்து… வெங்காயம், பச்சை மிளகாய், சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி, இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த் தூள், புதினா, கொத்த மல்லி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு, ஊற வைத்த அரிசி கலவையை ஊற்றவும்.
கால்சியம் குறை பாட்டினால் வரக்கூடிய வலிகள் !
இதனுடன் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து, குக்கரை மூடவும். நன்கு ஆவி வந்ததும் ‘வெயிட்’ போட்டு அடுப்பை சிறிதாக்கி, 10 நிமிடம் கழித்து இறக்கவும். வேக வைத்த கார்னை மேலே தூவி… பரிமாறவும்.