குழந்தைகளுக்கு பிடித்த டொமேட்டோ ஆம்லெட் செய்முறை !





குழந்தைகளுக்கு பிடித்த டொமேட்டோ ஆம்லெட் செய்முறை !

காலை வேளையில் ஒரு சத்தான காலை உணவை சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? அதுவும் 20 நிமிடத்தில் ஒரு ஆரோக்கியமான மற்றும் ருசியான காலை உணவை சமைக்க வேண்டுமா? 
டொமேட்டோ ஆம்லெட்
அப்படியானால் தக்காளி ஆம்லெட் செய்யுங்கள். தக்காளி ஆம்லெட் என்றதும் பலரும் முட்டை சேர்த்து செய்யக்கூடியதாக நினைக்கலாம். ஆனால் இது ஒரு சைவ ஆம்லெட். இதற்கு முட்டை எதுவும் தேவையில்லை. 

கடலை மாவு, வெங்காயம், தக்காளி மற்றும் மசாலா பொடிகள் இருந்தால் எளிதில் செய்யலாம். இந்த தக்காளி ஆம்லெட் டயட்டில் இருப்போருக்கு ஏற்றதும் கூட. பேச்சுலர்களும் இதை முயற்சிக்கலாம்.

உங்களுக்கு தக்காளி ஆம்லெட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி ஆம்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப் பட்டுள்ளது. 

அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அனைவரும் அறிய வேண்டிய மருத்துவக் குறிப்பு !
தேவையானவை:

கடலை மாவு - 1 கப்

தக்காளி - 2

வெங்காயம் - 1

இஞ்சி - 1 இன்ச்

பச்சை மிளகாய் - 1

கொத்தமல்லி - சிறிது

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

கரம் மசாலா - 1 சிட்டிகை

உப்பு - சுவைக்கேற்ப

தண்ணீர் - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

முதலில் வெங்காயம், தக்காளி, இஞ்சி, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்கு பொடியாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்க்க வேண்டும்.
அல்சர் நோய்க்கு அருமருந்து இளநீர் !
பின்பு அதில் பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.

ஆம்லெட் கலவையானது மிகவும் நீராக இல்லாமல், மிதமான நிலையில் இருக்க வேண்டும். இப்போது ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடேற்ற வேண்டும்.

பின் அதில் ஒரு கரண்டி ஆம்லெட் கலவையை ஊற்றி லேசாக பரப்பி விட வேண்டும். 

பின்பு அந்த ஆம்லெட்டை சுற்றி ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அடிப்பகுதி பொன்னிறமாகவும் மொறு மொறுப்பாகவும் ஆகும் போது தோசைக்கரண்டி பயன்படுத்தி திருப்பிப் போட வேண்டும். 

முன்னும் பின்னும் மொறு மொறுப்பானதும் எடுத்தால், சுவையான தக்காளி ஆம்லெட் தயார்.
Tags: