அருமையான வெஜ் சாட் செய்வது எப்படி?





அருமையான வெஜ் சாட் செய்வது எப்படி?

வெள்ளரிக்காயில் நீர் அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது சரியான உணவாக அமையும். தினமும் வெள்ளரிக்காயை உட்கொண்டால் தீவிரமான மலச்சிக்கலை நீக்கும்.
அருமையான வெஜ் சாட் செய்வது எப்படி?
வெள்ளரிக்காயில் இன்சுலின் சுரப்பதற்கு, கணையத்தில் உள்ள அணுக்களுக்கு தேவையான ஹார்மோன் ஒன்று வெள்ளரிக்காய் சாற்றில் உள்ளது. அதனால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு பெரிதும் உதவுகிறது. 
 
வெள்ளரிக்காயில் உள்ள ஸ்டேரோல் என்ற பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறையச் செய்யும். மேலும் அதிலுள்ள நார்ச்சத்து, பொட்டாசியம்  மற்றும் மெக்னீசியம் இரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.
 
வெள்ளரிக்காய் சாறு ஈறுகளில் இருக்கும் நோய்களை குணப்படுத்தும். மேலும் வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழித்து விடும். 
வெள்ளரிக்காயை கேரட் ஜூஸ் உடன் சேர்த்து பருகும் போது, உடலில் யூரிக் அமிலத்தின் அளவு குறைவதால் கீல்வாதத்திற்கும் நிவாரணம் கிடைக்கும்.
 
உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க வெள்ளரிக்காய் உதவுவதால், அவை சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். 

பூசணிக்காய் விதைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், மெக்னீசியம் மற்றும் ஃபேட்டி ஆசிட்டுகள் இதயத் துடிப்பிற்கு மிகவும் நன்மை விளைவிக்க கூடியது. 

மேலும் இதில் மோனோசாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் இருப்பதால் இது நம் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. மேலும் நல்ல கொலஸ்ட்ராலை அதிகப் படுத்துகிறது.
தேவையானவை: 

உருளைக் கிழங்கு – 2, 

வெள்ளரிக்காய் – ஒன்று,  

கேரட் – ஒன்று, 

ஸ்வீட் கார்ன் – ஒன்று, 

வெங்காயம் – ஒன்று, 

தக்காளி – ஒன்று, 

கொத்த மல்லி – சிறிதளவு, 

ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) – சிறிதளவு, 

சாட் மசாலா பொடி – தேவையான அளவு.

எலுமிச்சைச்சாறு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை:

அருமையான வெஜ் சாட் செய்வது எப்படி?
உருளைக் கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, உதிர்க்கவும். வெள்ளரிக்காய், கேரட்டை துருவவும். ஸ்வீட் கார்னை வேக வைத்து உதிர்க்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.

காய்கறிகளை ஒன்றாக கலந்து… கொத்த மல்லி, ஓமப்பொடி, சாட் மசாலா பொடி, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்துப் பரிமாறவும்.
Tags: