இதன் விதைகள் மட்டுமல்ல கீரையும் மருத்துவ குணம் நிறைந்தது. இதனை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன.
வெந்தயத்தில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்றவை அடங்கியுள்ளது. இது செரிமானம் மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது.
இது உடலுக்கு குளிர்ச்சியளிக்கும். பருவம் எய்திய பெண்களுக்கு உடல்சூடு காரணமாக வெள்ளைப்படுதல் உண்டாகி உடல் மெலிந்து போவார்கள்.
அப்படி யுள்ளவர்கள் வாரம் இரு முறை வெந்தயக்களி தயார் செய்து கொடுக்க வேண்டும். இது உடலுக்கு புத்துணர்ச்சியை வழங்கவும்.
எலும்புகள் நன்கு வளரச் செய்யவும் உதவும். உடல் சூட்டைத் தணிக்கும் சுவையான சத்துள்ள வெந்தயக் களி செய்முறை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெந்தயம் - 500 கிராம்
பச்சரிசி மாவு - 200 கிராம்
வெல்லம் அல்லது கருப்பட்டி - 100 கிராம்
சுக்குதூள் - அரை தேக்கரண்டி
ஏலக்காய் - 2 (தூளாக்கவும்)
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை :
ஏலக்காய், வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர், வெந்தயத்தை வெறும் கடாயில் சிவக்க வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு தூளாக்கவும்.
அரிசி மாவில், வெந்தய மாவு, தண்ணீரை கலந்து தோசை மாவு பதத்திற்கு தயார் செய்யவும். பாத்திரத்தில் வெல்லத்தைக் கொட்டி நீர் கலந்து, பாகு காய்ச்சி வடிகட்டி எடுக்கவும்.
கரைத்து வைத்துள்ள மாவை அடுப்பில் வைத்து நன்கு கிளற வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, கை விடாமல் கிளற வேண்டும். வெந்து வரும் போது வடிகட்டி வைத்துள்ள வெல்ல பாகை கலந்து கிளற வேண்டும்.
மாவு பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வர வேண்டும். தண்ணீரில் விரலை விட்டு விட்டு மாவை தொட்டால் அது விரலில் ஒட்டக் கூடாது.
அதுவே சரியான பதம். இறுதியாக அதில் நல்லெண்ணெய் ஊற்றி கிளறி சுக்கு தூள், ஏலக்காய் தூள் கலந்திடுங்கள். மிதமான சூட்டில் சாப்பிடவும்.