கோதுமையில் செலினியம் என்கிற மூலப் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த செலினியம் மனிதர்களின் சரும ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக இருக்கிறது.
தேவையான பொருட்கள்:
பீன்ஸ் - கால் கிலோ
வெங்காயம் - இரண்டு
வெங்காய தாள் - இரண்டு
கோதுமை மாவு - இரண்டு கப்
கரம் மசாலா - இரண்டு டேபிள் ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - ஐந்து தேகரண்டி
கடலை பருப்பு - ஐந்து தேகரண்டி
இட்லி மாவு - இரண்டு கரண்டி
மிளகாய் தூள் - இரண்டு தேகரண்டி
உப்பு - தேவைகேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
பீன்ஸ், வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பீன்சை ஆவியில் வேக வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தோசை மாவு, கோதுமை மாவு, சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின், வேக வைத்த பீன்ஸ், வெங்காயம், வெங்காய தாள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் அதை கோதுமை மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
24 வயதில் இ-காமர்ஸில் கலக்கும் குமரி ஷாப்பி !
அடுப்பில் தவாவை வைத்து மாவை அடை போல் ஊற்றி எண்ணெய் சுற்றி ஊற்றி இருபுறமும் வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும். பீன்ஸ் கோதுமை அடை ரெடி.