ஒயிட் சென்னா ரோஸ்ட் செய்வது எப்படி?





ஒயிட் சென்னா ரோஸ்ட் செய்வது எப்படி?

சுண்டலில் வைட்டமின் பி, செலினியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், நார்ச்சத்து, மெக்னீசியம் ஆகியச் சத்துகள் அதிகளவில் உள்ளன. உடலின் இரும்புச் சத்தை மேம்படுத்துகிறது. 
ஒயிட் சென்னா ரோஸ்ட் செய்வது எப்படி?
எனவே, ஆஸ்டியோ போரோசிஸ் மற்றும் இரத்த சோகை ஆகியவற்றை ஊட்டச்சத்து நிறைந்த கொண்டைக் கடலை உட்கொள்வதன் மூலம் சரி செய்யலாம். 

கொண்டை கடலையில் ராஃபினோஸ் எனப்படும் கரையக்கூடிய உணவு நார்ச்சத்து உள்ளது. வெள்ளை கொண்டைக் கடலையை விட கருப்பு கொண்டைக் கடலையில் புரதம் மற்றும் நார்ச்சத்து சற்றே அதிகமாக உள்ளது. 

வெள்ளை கொண்டைக் கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும். மாலையில் செய்வதென்றால் காலையில் கூட ஊற வைத்துக் கொள்ளவும்.

கொண்டைக் கடலையில் ஏராளமான நுண்ணிய ஊட்டச்சத்துக்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. 

கொண்டைக் கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. 
இவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். சரி இனி வெள்ளை கொண்டைக் கடலை கொண்டு ஒயிட் சென்னா ரோஸ்ட் செய்வது எப்படி?  என்று பார்ப்போம்.

தேவையானவை:
வெள்ளை கொண்டைக் கடலை – ஒரு கப்,

பச்சரிசி – 2 கப்,

பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் – தலா 3,

இஞ்சி – சிறு துண்டு,

தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்,

பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன்,

சீரகம் – ஒரு டீஸ்பூன்,

பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை,

கொத்த மல்லித் தழை – சிறிதளவு,

வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்),

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வெள்ளை கொண்டைக் கடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும். பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறிய சென்னாவை நன்கு கழுவி… அரிசி, இஞ்சி, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் ஆகியவற்றை தாளித்து, மாவில் சேர்த்துக் கலக்கவும். 

மாவை தோசைக் கல்லில் மெல்லிய தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வெந்ததும் எடுக்கவும். இதற்கு டொமேட்டோ கெட்சப் தொட்டு சாப்பிட்டால்… சூப்பர் சுவையில் இருக்கும்.
Tags: