கலர்ஃபுல் சில்லி பரோட்டா செய்வது எப்படி?





கலர்ஃபுல் சில்லி பரோட்டா செய்வது எப்படி?

இன்றைக்கு பரோட்டா என்பது நிறைய மக்களுக்கு பிடித்த உணவாக உள்ளது.  மைதா மாவைச் சுத்திகரிக்க பென்சாயில் பெராக்ஸைடு (Benzoyl Peroxide) எனும் வேதிப்பொருள் பயன்படுத்தப் படுகிறது. 
கலர்ஃபுல் சில்லி பரோட்டா செய்வது எப்படி?
இது உடலுக்குத் தீங்கான ஒன்றாகும். அது மட்டுமல்ல, நீரிழிவு (சர்க்கரை) நோய் வர வாய்ப்புகள் அதிகம். இவற்றை சில ஐரோப்பிய நாடுகளும், சீனாவும், இங்கிலாந்தும் தடை செய்திருக்கின்றன. 
பரோட்டாவின் மூலப்பொருட்கள் சில விதங்களில் உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கக் கூடியது என சில கருத்துக்களும் முன் வைக்கப் படுகின்றன.

கடைகளில் தயார் செய்யும் பரோட்டாவை சாப்பிடாமல், வீட்டில்  பரோட்டாவை தயார் செய்து உண்ணுவது ஆரோக்கியமானது. 

சுவையான ஆரோக்கியமான கலர்ஃபுல் சில்லி பரோட்டா செய்வது எப்படி? என்று  பார்ப்போம்.
தேவையானவை:

பரோட்டா – 10,

மைதா – அரை கப்,

சோள மாவு – முக்கால் கப்,

ஃபுட் கலர் (சிவப்பு) – ஒரு சிட்டிகை,

மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்,

வெங்காயம் – ஒன்று,

பச்சை மிளகாய் – 2,

இஞ்சி – சிறு துண்டு,

குடமிளகாய் – ஒன்று,

பூண்டு – 6 பல்,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கலர்ஃபுல் சில்லி பரோட்டா செய்வது எப்படி?
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும். குடமிளகாயை நீளநீளமாக, மெல்லிய தாக நறுக்கி, வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு லேசாக வதக்கிக் கொள்ளவும். 

மைதாவுடன், அரை கப் சோள மாவு, உப்பு, ஃபுட் கலர் ஆகியவற்றை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். 

பரோட்டாக்களை சின்னச் சின்ன துண்டு களாக நறுக்கி, கரைத்த மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து தனியே வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகிய வற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கி… 
மிளகாய்த் தூள், பொரித்தெடுத்த பரோட்டா துண்டுகள் சேர்த்துக் கிளறவும். மீதமுள்ள கால் கப் சோளமாவை கொஞ்சம் நீர் விட்டு கரைத்து பரோட்டா கலவை யில் ஊற்றிக் கிளறி இறக்கவும். 
வதக்கி வைத்த குடமிளகாயை மேலே தூவவும். தயிர் பச்சடி, இதற்கு தொட்டுக் கொள்ள ஏற்றது.
Tags: