கொழுக்கட்டை முதல் இடியாப்பம், புட்டு, இன்ஸ்டன்ட் இட்லி, தோசை போன்ற சிற்றுண்டிகளும் முறுக்கு, சீடை, தட்டை போன்ற நொறுக்கு தீனிகள் கூட அரிசி மாவை பயன்படுத்தி செய்யப்படுகிறது.
மேலும் பழுப்பு அரிசி மாவில் அதிக அளவு பி வைட்டமின்கள் உள்ளன. அரிசி மாவில் எளிதில் பூச்சி வைக்கும் என்பதால் காற்று புகாத, சுத்தமான, உலர்ந்த கன்டெயினரில் சேமித்து வைக்க வேண்டும்.
உணவுகளின் சுவையை கூட்ட அல்லது தேவையான பதத்தில் தயாரிக்க அரிசி மாவை எவ்வாறு பயன்படுத்தலாம், உணவுகளை தவிர வேறு எதற்காக அரிசி மாவை பயன்படுத்தலாம் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.
அரிசி மாவு மார்க்கெட்டில் எளிதாக கிடைக்கும் என்றாலும் வீட்டில் இருக்கும் அரிசியை கழுவி அதை காய வைத்து நன்கு பவுடராக அரைப்பதன் மூலம் அரிசி மாவை தயார் செய்து கொள்ளலாம்.
சரி இனி அரிசி மாவு பயன்படுத்தி டேஸ்டியான அருமையான கார்த்திகை அப்பம் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
வெல்லப்பொடி - 1/2 முதல் 3/4 கப் வரை
நன்கு கனிந்த வாழைப்பழம் - 1
பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் - 1 அல்லது 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
1/2 கப் தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வாழை பழத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும்.
அரிசி மாவு, மசித்த வாழைப்பழம், தேங்காய்த் துண்டுகள், ஏலக்காய்த் தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதில் வெல்ல நீரை விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
தேவை யானால் சிறிது நீரையும் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் மாவை எடுத்து ஊற்றவும். பொன்னிற மாக சிவக்கும் வரை பொரித்து எடுக்கவும்.
இரவில் நச்சுப்பூச்சி கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறிய !
குறிப்பு:
அரிசிமாவிற்குப் பதில், மைதா அல்லது கோதுமை மாவிலும், ரவாவிலும் கூட இந்த அப்பத்தை செய்யலாம். அல்லது எல்லா மாவிலும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்தும் செய்யலாம்.
வெல்லத்திற்கு பதில் சர்க்கரையையும் பயன் படுத்தலாம். அப்பம் வெள்ளை யாக இருக்கும். மேலும், இதை எண்ணையில் பொரித் தெடுப்பதற்குப் பதில், குழிப் பணியாரச் சட்டியிலும் பணியாரம் செய்வது போல் சுட்டெடுக்கலாம்.