சுவையான காலிப்ளவர் கம்பு அடை செய்வது எப்படி?





சுவையான காலிப்ளவர் கம்பு அடை செய்வது எப்படி?

காலிப்ளவரானது அதிக வகைகளில் இருப்பதில்லை என்பதாலும் அதன் சுவையானது ஈர்ப்பினை ஏற்படுத்துவதில்லை என்பதாலும் பெரும்பாலானோருக்கு காலிப்ளவரை பிடிப்பதில்லை. 
சுவையான காலிப்ளவர் கம்பு அடை செய்வது எப்படி?
ஆனாலும், காலிப்ளவரை வைத்து பல வகையான உணவுகளை நாம் சாப்பிட்டு வருகிறோம். குறிப்பாக, காலிப்ளவர் அரிசி, காலிப்ளவர் வருவல் ஆகியவை முக்கியமானவை. 
ஆனாலும், இந்த காலிப்ளவரை உண்பதன் மூலம் இரைப்பை மற்றும் குடல் ஆகியவற்றினை பாதிக்கும் பக்க விளைவுகள் உருவாகின்றன என மருத்துவர்கள் கூறுகின்றனர்.  

காலிஃபிளவர் மற்றும் அதனைச் சார்ந்த கலப்பின குடும்ப காய்கறிகளில் ராஃபினோஸ் என்ற சத்து ஒன்று உள்ளது, அதாவது, இது கார்போ ஹைட்ரேட்டின் ஒரு வகையாகும். 

இது காலிப்ளவர் தாவரங்களில் இயற்கையாக உருவாகிறது. ஆனால், மனித உடலில் இதனை செரிப்பதற்கு தேவையான ஆற்றல் இல்லை. எனவே, அவை கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 
தேவையான பொருட்கள் : 

கம்பு மாவு - 1 கப் 

உப்பு - தேவையான அளவு 

தயிர் - அரை கப் 

காலிப்ளவர் - சிறியது 1 

சீரகம் - 1 ஸ்பூன் 

வெங்காயம் - 2 

கறிவேப்பிலை - சிறிதளவு 

கொத்த மல்லி - சிறிதளவு 

பச்சை மிளகாய் - 2 

மிளகு பொடித்தது - அரை ஸ்பூன் 

எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை : 

காலிப்ளவர் கம்பு அடை
வெங்காயம், கறிவேப்பிலை, கொத்த மல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, உப்பு போட்டு 1/2 கப் அளவு தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்து 30 நிமிடங் களுக்கு தனியே வைக்கவும். 

காலிபிளவரை உப்பு சேர்த்த சுடு தண்ணீரில் 10 நிமிடங்கள் வைத்து சுத்தப் படுத்தி ஆற வைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி கொர கொரப்பாக அரைத்து கரைத்து வைத்துள்ள மாவில் சேர்க்கவும்.

அடுத்து அந்த மாவில் சீரகம், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்த மல்லி, பச்சை மிளகாய், மிளகு சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும். 

மூட்டு வலி (ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ்) பற்றி அறிய !

அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் இரண்டு கரண்டி மாவை விட்டு வட்டமான அடையாக பரப்பவும். அடையின் மேலும், சுற்றியும் எண்ணெய் விட்டு வேக விடவும். 

ஓரங்கள் சிவக்க ஆரம்பித்ததும் திருப்பிப் போடவும். இரண்டு பக்கங்களும் சிவக்க வெந்தவுடன் தட்டில் எடுத்து வைத்து பரிமாறவும். கம்பு - காலிப்ளவர் அடை ரெடி.
Tags: