டேஸ்டியான சொஜ்ஜி அப்பம் செய்வது எப்படி?





டேஸ்டியான சொஜ்ஜி அப்பம் செய்வது எப்படி?

முந்திரியில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தவும், கொழுப்பை எரிக்கவும் உதவி உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. 
சொஜ்ஜி அப்பம்
மேலும் முந்திரி ஒப்பீட்டளவில் புரதத்தின் நல்ல ஆதாரமாக உள்ளதால், ​​தினசரி சரியான அளவு இதை சாப்பிடுவது உண்மையில் எடையை குறைக்க உதவுகிறது. 

உண்மையில் முந்திரியில் உள்ள வைட்டமின் டி மற்றும் மெக்னீசியம் எலும்புகளை வலுவாக வைத்திருக்கும். அதற்கு ஒரு கப் தண்ணீரில் 6-7 முந்திரியை இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். 
அதன் பிறகு மறுநாள் காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். உண்மையில், ஊற வைத்த முந்திரியை உண்பதால், உடல் அதன் சத்துக்களை எளிதில் உறிஞ்சி விடும். 

தினசரி சிறதளவு முந்திரிப் பருப்பைச் சாப்பிட்டுவந்தால், ரத்தஅழுத்தம் சீராக இருக்கும். சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். செல்கள் முதிர்ச்சி அடைவதை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு. 

முந்திரி பருப்பில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய கொலஸ்ட்ரோல் உள்ளது. சரி இனி ரவா பயன்படுத்தி டேஸ்டியான சொஜ்ஜி அப்பம் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 
தேவையான பொருட்கள்:

ரவா - 1 கப்

வெல்லம் - 1 கப்

தேங்காய்த் துருவல் - 1/2 கப்

ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்

முந்திரி பருப்பு - சிறிது (விருப்பப் பட்டால்)

மைதா - 2 கப்

உப்பு - 1/4 டீஸ்பூன்

நெய் - 2 அல்லது 3 டீஸ்பூன்

எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

உருளைக்கிழங்கு பிரியாணி செய்வது எப்படி?

செய்முறை:

மைதாவை நன்றாக சலித்து விட்டு, அத்துடன் உப்பு, ஒரு டீஸ்பூன் நெய் அல்லது எண்ணை விட்டு கலந்துக் கொள்ளவும். அதில் சிறிது சிறிதாக தண்ணீரைச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.

அடி கனமான பாத்திரத்தில் 2 கப் தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது, ரவாவைக் கொட்டிக் கிளறவும். ரவா வெந்தவுடன் வெல்ல த்தைப் பொடித்து சேர்க்கவும். 

தேங்காய்த் துருவலையும் சேர்த்து நன்றாகக் கிளறவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து கெட்டி யானதும், ஏலக்காய் தூள், முந்திரி பருப்பு (ஒன்றி ரண்டாக ஒடித்துப் போடவும்),

ஒரு டீஸ்பூன் நெய் ஆகிய வற்றைச் சேர்த்துக் கிளறி விடவும். தொட்டால் கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும். இந்த பதம் வந்தவுடன், இறக்கி வைத்து ஆற விடவும். ஆறியவுடன், சிறு உருண்டை களாக உருட்டி வைக்கவும்.
மைதா மாவை எலுமிச்சம் பழ அளவிற்கு எடுத்து, பூரி போல் உருட்டவும். அதன் மேல் ரவா பூரண உருண்டையை வைத்து, பூரியின் மூலையை ஒன்றாகச் சேர்த்து மூடவும். 

பின்னர் இலேசாக அதை விரல்களால் அழுத்தி அதிரசம் போல் வட்டமாக தட்டவும். ஒரு வாணலியில் எண்ணையை ஊற்றி சூடாக்கவும். 

உயிருக்கு உலை வைக்கும் அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு ! 

எண்ணை காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, செய்து வைத்துள்ள அப்பத்தைப் போட்டு பொன்னிற மாக பொரித்தெடுக்கவும்.

கவனிக்க: மாவில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பிசைந்தால் அப்பம் கருஞ் சிவப்பாக இருக்கும். வெல்லத் திற்குப் பதில் சர்க்கரை சேர்த்தும் செய்யலாம்.

பண்டிகை நாட்களில் மேற் கண்டவாறு செய்ய வேண்டும். பண்டிகை அல்லாமல், சாதாரண நாட்களில் செய்வ தென்றால், மீந்து போன கேசரியை வைத்தும் இதை செய்யலாம்.
Tags: