தேவைாயன பொருள்கள்
பால் - 1 லிட்டர்
மைதா மாவு - 100 கிராம்
நெய் - 50 கிராம்
சர்க்கரை - 400 கிராம்
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
மெலிதாக சீவிய முந்திரி - 6 ஸ்பூன்
துருவிய பிஸ்தா - 2
செய்முறை
பாலை ஒரு அடிகனமான பாத்திர த்தில் ஊற்றி, அடுப்பை சிம்மில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
20 நிமிடத்தில் பால் சுண்டி விடும்.
கைகளால் உருட்டும் பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு மூழ்கும் வரை நீர் ஊற்றி கம்பிப் பதம் வந்ததும் கோவா ஆகியி ருக்கும்
பாலை உதிர்த்து போட்டு, மைதா மாவைத் தூவி இரண்டு மாகச் சேர்ந்து வந்ததும் நெய் ஊற்றி, ஏலக்காய் தூள் தூவி இறக்கி விடவும்.
கலவையை சிறிய உருண்டை களாக எடுத்து வட்டமாக தட்டி அதன் அதன் மேல் 3 அல்லது 4 சீவிய முந்திரி பிஸ்தாவை வைத்து அலங் கரித்தால் சுவையான தூத்பேடா ரெடி.