சேனைக்கிழங்கில் நாம் நினைப்பதை விட அதிக நன்மைகள் இருக்கிறது. குறிப்பாக கேரள மக்களை இதை அன்றாட வாழ்வில் சாப்பிடுவார்கள். இதன் விலைவாக அவர்களின் உடல் ஆரோக்கியம் காப்பற்றப் படுகிறது.
மேலும் கேரள மக்களின் கூந்தல் அதிகமாக வளரவும் இது காரணமாக இருக்கிறது. 100 கிராம் சேனைக்கிழங்களில் நார்சத்து, கார்போ ஹைட்ரேட், பொட்டாசியம், இரும்புசத்து, கால்சியம், மெக்னீஷியம், சோடியம், துத்தநாகம் ஆகியவை உள்ளது.
மேலும் 100 கிராம் சேனைக்கிழங்கில் 118 கலோரிகள் இருக்கிறது. இந்த ஊட்டசத்தால் நமது சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். உடல் எடை குறையவும், மலச்சிக்கலையும் நீக்கும்.
மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. நமது உடலில் சுரக்கும் ஹார்மோன்களை சமநிலைப் படுத்துகிறது. கல்லீரலின் நன்மைக்காகவும் இதை சாப்பிட்டால். இதனால் நம் உணவில் இதை சேர்த்து கொள்ள வேண்டும்.
உங்கள் வீட்டில் உள்ளோர் சேனைக்கிழங்கை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் சேனைக்கிழங்கு உள்ளதா? அதைக் கொண்டு ஒரு சுவையான ரெசிபியை செய்ய விரும்புகிறீர்களா?
அப்படியானால் கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவலை செய்யுங்கள். இந்த வறுவல் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
சில சமயங்களில் இதை அப்படியே கூட சாப்பிடலாம். முக்கியமாக இந்த சேனைக்கிழங்கு வறுவல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும்.
உங்களுக்கு வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சேனைக்கிழங்கு வறுவல் ரெசிபியின் செய்முறையை படித்து செய்து சுவைத்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சேனைக் கிழங்கு - பாதியாக வெட்டியது
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - சிறிது
புளி - ஒரு கொட்டை பாக்களவு
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக் கேற்றவாறு
எண்ணை - 4 முதல் 5 டீஸ்பூன் வரை
மழைக் காலத்தில் பரவும் நோய்கள் என்ன?
செய்முறை:
சேனைக் கிழங்கைக் கழுவி, தோலை சீவி விட்டு, 3 அல்லது 4 அங்குல அளவிற்கு மெல்லிய வில்லை களாக வெட்டிக் கொள்ளவும்.
வெட்டிய வில்லை களைக் கொதிக்கும் நீரில் போட்டு சில நிமிடங்கள் வேக விடவும். முக்கால் பங்கு வெந்தால் போதும். குழைய விடக் கூடாது. புளியை சிறிது நீரில் ஊற வைத்து, கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
ஒரு தட்டில் மிளகாய்த் தூள், மஞ்சள் பொடி, பெருங்காயத் தூள் கெட்டியாகக் கரைத்த புளி ஆகிய வற்றைச் சேர்த்து, விழுது போல் ஆக்கிக் கொள்ளவும்.
தேவை யானால் சிறிது தண்ணீரையும் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
தோசைக் கல்லை அடுப் பிலேற்றி காய விடவும். கல் காய்ந்ததும், அதில் சிறிது எண்ணை தடவவும்.
சேனைக் கிழங்கு வில்லைகள் ஒவ்வொன்றாக எடுத்து, மிளகாய் விழுதில் நன்றாக பிரட்டி எடுத்து, தோசைக் கல்லில் தனித் தனியாக வைக்கவும். அதைச் சுற்றி சிறிது எண்ணையை விட்டு, மிதமான தீயில் வேக விடவும்.
கால்சியம் குறை பாட்டினால் வரக்கூடிய வலிகள் !ஓரிரு வினாடிகள் கழித்து, ஒவ்வொரு வில்லை களாகத் திருப்பி போட்டு, மறு பக்கத்தையும் வேக விடவும். இவ்வாறே திருப்பி திருப்பி போட்டு, இரண்டு பக்கமும் நன்றாக சிவக்கும் வரை வைத் திருந்து எடுக்கவும்.
சாம்பார் சாதம் / ரசம் சாதம் ஆகிய வற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.