அருமையான சன்னா சாட் செய்வது எப்படி?





அருமையான சன்னா சாட் செய்வது எப்படி?

புரோட்டீன், மாவுச்சத்து, கலோரி, ஃபோலிக் ஆசிட், நார்ச்சத்து, தாது உப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், துத்தநாகம் என அத்தனையும் அடங்கியது தான் கொண்டைக்கடலை. 
அருமையான சன்னா சாட் செய்வது எப்படி?
ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுப்பதுடன், வயிற்றில் குடல் பகுதியில் வரும் புற்றுநோயை தடுக்கக்கூடிய தலை சிறந்த பணியை இந்த கடலை செய்கிறது. 

ஓரளவு கொழுப்பு இருந்தாலும் கூட, சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், சாப்பிடக்கூடிய பயிறு வகையாகும். கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த பயிறு நல்லது. 

கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கொண்டை கடலை எளிதாகவே கிடைக்கும். இதில், சிறிய அளவிலான கறுப்பு கொண்டைக் கடலையில் நிறைய நார்ச்சத்து இருக்கிறதாம். 

அதனால், இந்த கடலையை முளைக்கட்டி சாப்பிடும் போது, கொழுப்பு வெகுவாக கரைந்து விடுகிறது. இதிலுள்ள கால்சியம் எலும்பு மற்றும் பற்களின் வலிமையை அதிகரிக்க செய்கிறது. 
ஆனால், காலையில் கொண்டைக் கடலையை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும். சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள், கண்டிப்பாக இதனை தவிர்க்க வேண்டும். 

அதே போல, வாத நோய் உள்ளவர்கள், மூல நோய் உள்ளவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்களும் இதனை தவிர்க்க வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அஜீரணம் ஏற்படும்.. வயிற்றுப் போக்கு, வாந்தி போன்றவை ஏற்படலாம்.
தேவையானவை:

சன்னா (கொண்டைக்கடலை) – ஒரு கப், 

உருளைக் கிழங்கு – 4, 

வெங் காயம் - ஒன்று, 

தக்காளி – ஒன்று, 

பச்சை மிளகாய் – 4, 

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், 

ஓமப் பொடி (ஸ்நாக்ஸ் வகை) – கால் கப், 
சாட் மசாலா பொடி, எண்ணெய் – சிறிதளவு, 

உப்பு – தேவை யான அளவு, 

கொத்த மல்லி, ஸ்வீட் சட்னி, கிரீன் சட்னி – சிறிதளவு.

செய்முறை:
அருமையான சன்னா சாட் செய்வது எப்படி?
கொண்டைக் கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்து மறுநாள் வேக விடவும். உருளைக் கிழங்கை வேக வைத்து, தோலு ரித்து, உதிர்க்கவும். 

வாணலியில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கி… 
எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தலாமா? டிப்ஸ்!
வேக வைத்த சன்னா, உதிர்த்த உருளைக் கிழங்கு, சாட் மசாலா பொடி, உப்பு, ஸ்வீட் சட்னி, கிரீன் சட்னி சேர்த்து இறக்கவும். கொத்த மல்லி, ஓமப் பொடியை மேலே தூவி அலங்கரித்து பரிமாறவும்.
Tags: