காளான்கள் சிடின் மற்றும் பீட்டா-குளுக்கனின் நல்ல மூலமாகும், இது கொழுப்பை குறைக்கும் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பட்டன், சிப்பி, ஷிடேக், எனோகி, ஷிமேஜி, போர்டோபெல்லோ மற்றும் போர்சினி என உண்ணக்கூடிய காளான்கள் பல வடிவங்களில் உள்ளன.
இந்த காளான்கள் பல்துறை திறன் கொண்டவை. அவை உலகெங்கிலும் உள்ள மக்கள் சைவ உணவு உண்பவர்களாக இருந்தாலும் சரி இல்லா விட்டாலும் சரி, காளான்களை தங்கள் உணவுகளில் சேர்த்து கொள்கின்றனர்.
தொழில்நுட்ப ரீதியாக பூஞ்சை/காளான்கள் பொதுவாக காய்கறிகளின் பிரிவில் வைக்கப் படுகின்றன. காளான்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு நன்மைகளையும் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக அவை பீட்டா- குளுக்கன்களை கொண்டிருப்பதால் பல நன்மைகளை அளிக்கிறது. எனவே, பெரும்பாலான உணவுகளைப் போலவே ஊட்டச்சத்து அடர்த்தியான, காளான்களும் ஆரோக்கியத்தை அளிக்கின்றன.
காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. காளானில் பியூரின் சத்து இருப்பதால் கீல்வாதம் உள்ளவர்கள் அதிகம் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அதே போல, காளானை நன்றாக சமைத்தபிறகே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சைவப் பிரியர்கள் காளானை அசைவ ருசியில் சமைத்துச் சாப்பிடுவார்கள்.
அது கிட்டத்தட்ட கோழிக் கறியின் ருசியைத் தரும். நிஜமாகவே காளானை கோழிக் கறியுடன் சேர்த்து மசாலா செய்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும். செய்து சாப்பிடலாமா?
தேவை யான பொருட்கள்
:
கோழிக்கறி - 1/2 கிலோ
குட மிளகாய் - 150 கிராம்
காளான் - 100 கிராம் (நறுக்கியது)
சாம்பார் வெங்காயம் - 150 கிராம்
பச்சை மிளகாய் - 4
மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 6 பல்
உப்பு, எண்ணெய் - தேவைக் கேற்ப
செய்முறை :
கோழிக் கறியைச் சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும். சாம்பார் வெங்காயத்தை உரித்துக் கீறிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இடித்துக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு தட்டிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை நன்கு வதக்கவும். பின் நறுக்கிய குடமிளகாய், காளான், சிக்கன் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும்.
தட்டிய மிளகாய் இஞ்சி, பூண்டு இவை சேர்த்து வதக்கவும். போதுமான உப்பு சேர்க்கவும். லேசாக நீர் தெளித்து, குறைந்த தீயில் இதை வைத்திருக்கவும்.
அனைத்துப் பொருட்களும் மசாலாவுடன் ஒன்று சேர்ந்து வெந்ததும், மிளகுத் தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.