போட்டி (குடல்) கத்திரிக்காய் சால்னா செய்வது எப்படி?





போட்டி (குடல்) கத்திரிக்காய் சால்னா செய்வது எப்படி?

ஆட்டுக் குடலை சாப்பிடுவதால் நமக்கு பல நன்மைகளை அளிக்கும். ஆட்டுக் குடல் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் உள்ளிட்ட ஊட்டச் சத்துக்களின் வளமான மூலமாகும். 

போட்டி (குடல்) கத்திரிக்காய் சால்னா
இதில் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய அமினோ அமிலங்கள், வைட்டமின் பி 12, இரும்பு, துத்தநாகம் மற்றும் செலினியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 

அவை இரத்த சிவப்பணு உற்பத்தி, நோயெதிர்ப்பு மற்றும் ஆற்றல் வளர்சிதை மாற்றம் போன்ற பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு முக்கியமானவை. ஆட்டுக் குடலில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது நம் உடலில் உள்ள செரிமான அமைப்பை ஊக்குவிக்கும். 
நார்ச்சத்து குடல் இயக்கத்தை ஒழுங்கு படுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும், குடலை ஆரோக்கிய மானதாக்க உதவுகிறது. நம் பெருங்குடலில் உண்டாகும் புற்றுநோய் மற்றும் பிற செரிமானக் கோளாறுகளை குறைக்கவும் உதவும்.

ஆட்டுக்குடலில் கொலாஜனின் குறிப்பிடத்தக்க ஆதாரமாக அறியப்படுகிறது, இது தோல் ஆரோக்கியம், கூட்டு செயல்பாடு மற்றும் எலும்புகளில் உள்ள இணைப்புத் திசுக்களை மேம்படுத்த உதவும் புரதமாகும். 

ஆடு குடலை உட்கொள்வது உடலில் கொலாஜன் உற்பத்திக்கு பங்களிக்கும், ஆரோக்கியமான தோலை பராமரிக்க உதவுகிறது மற்றும் மூட்டு நெகிழ்வுத் தன்மையை ஆதரிக்கிறது.
ஆட்டிறைச்சி வகைகளில் குடலும் ஒன்று இந்த சால்னா வயிற்றிற்கு ரொம்ப நல்லது, சூப் வைத்து குடித்தால் வயிற்றுபுண் ஆறும். இது எங்க பாட்டி எனக்கு சொல்லிக் கொடுத்தது.
தேவையான பொருட்கள் 

ஆட்டு குடல் சால்னா (போட்டி குர்மா ) - முழுசு ஒன்று 

வெங்காயம் - ஐந்து (பெரியது) 

தக்காளி - நான்கு (பெரியது) 

பச்சமிளகய் - 4 

இஞ்சி, போண்டு பேஸ்ட் - 5 மேசை கரண்டி 

கொத்து மல்லி - கால் கட்டு 

புதினா - கொஞ்சம் 

மிளகாய் தூள் – இரண்டரை தேக்கரண்டி 

தனியா தூள் - இரண்டரை மேசை கரண்டி 

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி 

தேங்காய் - அரை மூடி

எண்ணை - 5 தேக்கரண்டி 

பட்டை, லவங்கம், ஏலம் தலா - இரண்டி ரண்டு 

கத்திரிக் காய் - அரை கிலோ 

கடலைப் பருப்பு - கால் கப் 
செய்முறை 
குடலை மஞ்சள் தூள் கொஞ்சம் வினீகர் போட்டு, நன்றாக பத்து நிமிடம் ஊற வைத்து அதில் உள்ள அழுக்கை தேய்த்து கழுவவும். கிளீன் ஆன குடல் கிடைத் தால் பிரச்சனை இல்லை. 

சட்டியை காய வைத்து எண்ணை ஊற்றி சூடு வந்ததும் பட்டை, லவங்கம், ஏலம் போடவும், போட்டு அரிந்து வைத் துள்ள் வெங்காயத்தை வத்க்கவும். வதங்கியதும் இஞ்சி போண்டு பேஸ்ட் போட்டு பொன்னிறமாக வதக்கவும். 

அத்துடன் குடலையும் போட்டு நல்ல பெறட்டவும். பிறட்டி ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து பிறகு தக்காளி, பச்ச மிளகாய், மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு வதக்கி ஐந்து நிமிடம் சிம்மில் வைக் கவும். 

அதற்கு ஏற்றார் போல தண்ணீர் ஆறு ஏழு கப் ஊற்றிஅரை மணி நேரம் குக்கரில் வேக விடனும். 

கடலைப் பருப்பை அந்த குக்க்கரிலேயே ஐந்து நிமிடம் ஊற வைத்து ஒரு சிரிய டப்பியில் மூடி போட்டு மூடி போட்டு வெயிட்டையும் போட்டு வேக விடவும். 
வெந்து குக்கர் சவுண்டு அடங்கியதும் அதில் உள்ளே வைத்திருக்கும் கடலைப் பருப்பை லேசாக நச்சு போடவும். 

போட்டு கத்திரிக்காயை நான்காக அரிந்து போட்டு தேங்காயையும் அரைத்து ஊற்றி கொதிக்க விட்டு .கத்திரிக்காயை வெந்ததும் இறக்கி விடவும்.
Tags: