சூப்பரான முருங்கைக்காய் வடை செய்வது எப்படி? #Vadai





சூப்பரான முருங்கைக்காய் வடை செய்வது எப்படி? #Vadai

முருங்கைக்காய் குறைவான விலையில் கிடைக்கும் அதிக சத்து நிறைந்த காயாகும். முருங்கை மரத்தில் உள்ள காய், இலை, மற்றும் பூ போன்ற அனைத்து பாகங்களிலும் மருத்துவ பயன்கள் அதிகமாக உள்ளன. 
முருங்கைக்காய் வடை
காய் மற்றும் இலைகள் வைட்டமின் சி மிகுதியாகக் கொண்டவை. முருங்கைக்காயில் உள்ள அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன. 

முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. முருங்கை காய் உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும். 
இதை சாப்பிட்டால் சிறுநீரகம் பலப்படும், தாது உற்பத்தி அதிகரிக்கும். வாரத்தில் குறைந்தது இரண்டு முறை முருங்கைக்காயை உணவாக எடுத்து கொண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும். 

குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் இருக்கும் கிருமி பூச்சிகள் வெளியேறும்.

மெதுவடை, மசால்வடை சாப்பிட்டு இருப்பீர்கள். சற்று மாறுதலாக முருங்கைக் காய் வடை செய்து பாருங்கள். புதிய சுவையாக உங்கள் நாக்கை ஈர்க்கும். செய்முறை இதோ... 

தேவையான பொருட்கள் : 

கடலைப் பருப்பு - 2 கப் 

பச்சை மிளகாய் - 6 

முருங்கைக் காய் - 4 

பூண்டு - 2 பல் 

பெரிய வெங் காயம் - 4 

உப்பு - தேவை யான அளவு 

எண்ணெய் (ரீபைண்ட்) - பொரிப்ப தற்கு தேவை யான அளவு 

செய்முறை :

கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.  முருங்கைக் காயை சிறு துண்டு களாக வெட்டி வேக வைத்து, ஆறி யதும் நடுவி லுள்ள சதைப் பகுதியை ஒரு பாத்திர த்தில் எடுத்து வைத்துக் கொள் ளவும். 
வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும். கடலைப் பருப்புடன், மிளகாய், பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அத்துடன் முருங்கைக்காய் சதைப் பகுதியையும் நறுக்கிய வெங்காய த்தையும் சேர்த்து பிசைந்து மாவு தயாரிக்கவும். 

சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், வடை களாகத் தட்டிப்போட்டு பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். 

முருங்கைக்காய் வடை வித்தியாசமான சுவையுடன், சூடாக சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
Tags: