சுவையான சுரைக்காய் மோர் கூட்டு செய்வது எப்படி? #Koottu





சுவையான சுரைக்காய் மோர் கூட்டு செய்வது எப்படி? #Koottu

சுரைக்காய் உடலுக்கு நலம் பயக்க்கூடிய காய் தான். உடலில் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடல் எடை குறைப்பு மற்றும் வேறு சில நோய்களையும் கட்டுப்படுத்தும். ஆனால் அதன் சாறு உடலுக்கு தீங்கு தரக்கூடியதாகும். 
சுவையான சுரைக்காய் மோர் கூட்டு செய்வது எப்படி?
குறிப்பாக சாறாக குடிப்பது அதுவும் வெறும் வயிற்றில் குடிப்பது உடலுக்கு தீங்கு தரும். மிக முக்கியமாக சுரைக்காய் கசப்பாக இருந்தால் சாப்பிடவே கூடாது.

அநேக பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சுரைக்காயை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று அறிவுறுத்துகிறார்கள், இதனால் சுரைக்காயின் மவுசும் பல மடங்கு அதிகமாகி விட்டது. 
சமீப காலத்தில் பழச்சாறு கடைகளிலும் சுரைக்காய் சாறு அதிகமாக விற்பனை செய்யப்பட்டன. சிலருக்கு இந்த சாறை குடித்த உடனே கடுமையான வாந்தி, குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் வாய்வு கோளாறுகள் ஏற்படும் அபயம் உள்ளது.

சுரைக்காய் சாறு செய்து குடிப்பதற்கு முன்பு அல்லது அதை எந்த முறையில் சாப்பிட்டாலும், முதலில் ஒரு துண்டு சுரைக்காயை அரிந்து பச்சையாக சுவைத்து பார்க்கவும். 

அது கசப்பான சுவையுடன் இருந்தால், அதை தூக்கி எறியுங்கள். கசப்பு சுவை இல்லாத பட்சத்தில், சாறாக அரைக்கலாம். ஆனால் எப்போதும் சுரைக்காய் சாறு செய்து சாப்பிடும் முன்பு நன்கு தண்ணீரில் கழுவி விட்டு சாறு செய்யவும். 
சுரைக்காய் சாறு செய்த 2 நிமிடத்தில் பருகி விட வேண்டும். இல்லாவிட்டால் அதில் பாக்டீரியா கிருமிகள் பரவும் அபாயம் உள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் சுரைக்காய் சாறு உட்கொண்டு, அதன் நச்சுத்தன்மை காரணமாக இறப்பு மற்றும் கடுமையாக உடல் நலம் பாதிப்புக்கு பலர் ஆளாகி இருக்கிறார்கள். 

எனவே சுரைக்காயை சாறாக குடிப்பதை விட வேக வைத்து சாப்பிடுவதே நலம் பயக்கும். இல்லையன்றால் சுரைக்காய் சூப்பாக பருகலாம். பாதிக்கப்பட்டு இருப்பதை விட பாதுகாப்பாக இருப்பதே சிறந்தது.

சங்குகளின் கூடுகளுக்குள் உயிர் வாழும் சந்நியாசி நண்டு !

தேவையானப் பொருட்கள் : 

சுரைக் காய் - 1 

தயிர் - 1 கப் 

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 

தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன் 

பச்சை மிளகாய் - 2 

சீரகம் - 1 டீஸ்பூன் 

தாளிக்க : 

எண்ணை - 1 டீஸ்பூன் 

கடுகு - 1/2 டீஸ்பூன் 

காய்ந்த மிளகாய் - 2 

பெருங் காயத் தூள் - ஒரு சிட்டிகை 

வெந்தயம் - 5 அல்லது 6 

கறிவேப் பிலை - சிறிது 

உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக் கேற்ற வாறு 

செய்முறை : 
சுரைக்காய் மோர் கூட்டு
சுரைக்காயின் தோலை சீவி விட்டு, உள்ளிருக்கும் விதை மற்றும் வெள்ளைப் பகுதியை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். 

தயிரை நன்றாகக் கடைந்து, அத்துடன் சிறிது நீரைச் சேர்த்து கெட்டி மோராக வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சுரைக்காய் துண்டுகளைப் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள், உப்பு, காய் மூழ்கும் அளவிற்கு சிறிது நீர் சேர்த்து வேக விடவும். 

காய் வெந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைப் போட்டு கலந்து ஓரிரு வினாடிகள் கொதிக்க விடவும். பின்னர் அடுப்பை சிறு தீயில் வைத்து, மோரைச் சேர்த்துக் கிளறி விட்டு, உடனே அடுப்பை அணைத்து விடவும். 

வீட்டிலேயே தர்பூசணி ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

நீண்ட நேரம் கொதிக்க விடக்கூடாது. ஒரு வாணலியில் அல்லது தாளிக்கும் கரண்டியில் எண்ணை விட்டு, சூடானதும் கடுகு சேர்க்கவும். 
கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் பெருங்காயம், காய்ந்த மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை  ஆகியவற்றைச் சேர்த்து, சற்றுக் கிளறி விட்டு, இந்த தாளிப்பை கூட்டில் கொட்டிக் கிளறவும். 

இதை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். அல்லது மற்ற சாத வகைகளுடன் தொட்டுக் கொள்ளவும் செய்யலாம்.