சூப்பரான வெண்டைக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி?





சூப்பரான வெண்டைக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி?

புரோட்டீன், நார்ச்சத்து, கொழுப்பு, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் C, B1, B2, B6, B9 சத்துக்கள் நிறைந்துள்ளன. 
சூப்பரான வெண்டைக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி?
சர்க்கரை நோயாளிகளுக்கு வெண்டைக்காய் போல சிறந்த உணவு வேறில்லை. எதிர்ப்பு சக்தி நிறைந்த இந்த காயை, உடல் எடை குறைப்போரும் பயன்படுத்தலாம். 

காரணம், 100 கிராம் வெண்டைக்காயில், வெறும் 35 கிலோ கலோரிகள் இருக்கிறதாம். 

ஞாபக ரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு வயிற்றுப்புண், பார்வை குறைபாடு இன்னும் ஏகப்பட்ட நோய்களை இந்த வெண்டைக்காய் தீர்க்கிறது. 
வெண்டைக்காயின் ஸ்பெஷாலிட்டியே அதன் வழவழப்புத் தன்மை தான். ஆனால், பலருக்கும் அந்த வழவழப்பு பிடிப்பதில்லை. வெண்டைக் காயிலுள்ள பெக்டின் (Pectin) மற்றும் கோந்துத் தன்மையே இந்த வழவழப்புக்கு காரணமாக உள்ளது. 

பெக்டின் + கோந்துப்பொருள் கரையும் நார்ச்சத்து நிறைந்தது என்பதால், ரத்தத்தில் கொழுப்பு, பித்த நீர் அதிகரிக்காமல் தடுக்கச் செய்து விடுகிறது. 

அத்துடன், மலச்சிக்கல் பிரச்சனையையும், வயிறு உபாதைகளையும் இந்த வழவழ வெண்டைக்காய் தான் போக்குகிறது. அளவுக்கு அதிகமான ஆண்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ள வெண்டைக்காயில், கரையும் நார்ச்சத்துக்கள் அதிகம். 

இந்த நார்ச்சத்துக்கள் தான் கொலஸ்ட்டிராலின் அளவையும் கட்டுப்படுத்தி, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாய நோய்கள் ஏற்படுவதை தடுக்கின்றன.
வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் C, ஆஸ்துமாவை விரட்டக் கூடியது. வெண்டைக் காயிலுள்ள ஃபோலேட், எலும்புகளை உறுதியாக்கக் கூடியது. இந்த ஃபோலிக் அமிலம் தான், கர்ப்பிணிகளுக்கு மிகவும் தேவையான சத்துக்களாகும்.

தேவையான பொருட்கள் : 

வெண்டைக் காய்கள் - 15; 

பச்சை மிளகாய் - 2;

எண்ணெய் - 2 ஸ்பூன்; 

தயிர் - 1 கப்; 

உப்பு - ருசிக் கேற்ப; 

தாளித்து மேலே தூவிக்கலக்க : 

எண்ணெய் - 1 ஸ்பூன்; 

ஜீரகம் - 1/2 டீ ஸ்பூன்; 

கடுகு - 1/2 ஸ்பூன்; 

உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்; 

காய்ந்த மிளகாய் - 1; 

கறிவேப் பிலை - ஒரு கொத்து. 
செய்முறை : 
வெண்டைக்காய் தயிர் பச்சடி
வெண்டக்காய்களை பாதிப்பாதியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அரிந்து வைத்துள்ள வெண்டைக்காய் மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு வெண்டைக்காய் முறுகி வதங்கும் வரை வதக்கவும். 

பிறகு தனியாக ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு ஜீரகம் கடுகு போட்டு பொறிய விட்டு, பின் உளுதம் பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். 
ஒரு வாணலியில் தயிரை ஊற்றி சூடாக்கி உப்பு, வெண்டைக்காய் சேர்த்துக் கலக்கி தாளித்து வைத்துள்ள பொருட்களைச் சேர்த்தால், வெண்டைக்காய் தயிர் பச்சடி ரெடி.
Tags: