கீழாநெல்லி இலையின் மருத்துவ குணங்கள் !





கீழாநெல்லி இலையின் மருத்துவ குணங்கள் !

நமது கால்களுக்குக் கீழ் வளர்ந்தாலும், நம் தலையைக் காக்கக்கூடிய மூலிகைகள் பல. எந்தவித பராமரிப்பும் இல்லாமல் தானாகவே வளர்வதால், எண்ணற்ற மருத்துவக் குணங்களைக் கொண்ட அவற்றை நாம் கண்டு கொள்வதில்லை. 
கீழாநெல்லி இலை
சின்ன உடல்நல பாதிப்பு என்றால்கூட, மருத்துவர்களிடம் ஓடிச்செல்லும் பழக்கம்தான் நம்மிடம் உள்ளது. மிகப் பெரிய நோய்களைக்கூட வீட்டில் இருந்தபடியே எளிதாகச் சரிசெய்யக் கூடிய  மூலிகைகள்  உண்டு. 
அப்படி ஓர் அற்புதமான மூலிகைக் கீரைதான் 'கீழாநெல்லி'. இதற்கு  கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி என்ற வேறு பெயர்களும் உண்டு. இது குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. 

நீர்நிலைகள், வயல் வரப்புகள் மற்றும் பாழ் நிலங்களில் வளரக்கூடியது. இதனுடைய இலைகள், புளியமரத்தின் இலைகளைப் போலவே இரண்டு வரிசைகளில் சிறியதாகக் காணப்படும். 

இதன் இலைகளுக்குக் கீழே, பூக்களும் காய்களும் அழகாக வரிசைகட்டி நிற்கும்.கீழா நெல்லி செடி புல்லை போன்று எங்கு பார்தாலும் வளரும் ஒரு வகை செடி. இந்த செடி பல மருத்துவ குணங்களை தன் வைத்துள்ளது. 
இதன் தாவரவியல் பெயர் பிலாந்தஸ் நெரூரி (Phyllanthus niruri) என்றும் வட மொழியில் பூமி ஆமலத்தி என்றும் அழைக்கப் படுகிறது.

கீழாநெல்லியின் இலைகளில் 'பில்லாந்தின்' என்னும் மூலப்பொருள் இருப்பதால், இதன் இலைகளில் கசப்புச்சுவை மிகுதியாக இருக்கும். 

பொட்டாசியம் சத்து அதிகமாகக் காணப்படும் தாவரங்களில் கீழாநெல்லியும் ஒன்று. இலைகளுக்குக் கீழே நெல்லிக்காயின் சிறிய வடிவமாக இதன் காய்கள் இருப்பதால்தான் இதை 'கீழாநெல்லி' என்று அழைக்கிறார்கள். 

இந்த கீழா நெல்லி ஒரு நல்ல அன்டி வைரல் ஏஜன்டாக பயன் படுகிறது (A Strong Anti Viral Agent ). இந்த செடி சாதாரண ஜல தோஷம் முதல் HIV வரை மருந் தாக பயன் படுகிறது. 

இதனுடைய இலை ஒரு சிறந்து அன்டி ஸ்கபிசாக(scabies) பயன் படுகிறது அதாவது சொறி சிரங்கிற்கு நல்ல மருந்தாக பயன் படுகிறதாம். 
கீழா நெல்லி இலையை பசை யாக அரைத்துக் கொண்டு அதில் சிறிதளவு உப்பை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். 

இந்த பசையை நம் உடலில் சொறி சிரங்கால் பாதிக்கப் பட்டுள்ள இடத்தில் தடவிவர பூரண குணமடையும். கீழாநெல்லி இலையைப் பறித்து நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். 

சுத்தமான இலையை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் மோருடன் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். 

மேலும் ஹெப்படைட்டிஸ் 'பி' மற்றும் 'சி' ஆல் உண்டாகும் கல்லீரல் பாதிப்பு களிலிருந்து நம்மைக் காக்கும். 

உலர்ந்த கீழாநெல்லிப் பொடியை மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புக்களைத் தடுத்து டயாலிஸிஸ் செய்வதிலிருந்து நம்மைக் காக்கும்.

கீழாநெல்லியின் வேரை நன்றாக அரைத்து பசும்பாலுடன் கலந்து மூன்று வேளையும் குடித்துவந்தால், உடல் குளிர்ச்சி அடையும். தொற்று நோய்கள் நெருங்காது.
நல்லெண்ணெய் இரண்டு டீஸ்பூன், கீழாநெல்லி வேர், சீரகம் மற்றும் பசும்பால் ஆகியவற்றை நன்றாக அரைத்து வடிகட்டி அந்தச் சாற்றைக் குடித்தால் தலைவலி குணமடையும். 
கலவையை ஊற்றும் போது நன்றாக கவனியுங்க !
கையளவு கீழாநெல்லி இலையை நன்றாக நசுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர், அதை மூன்று டம்ளர் நீரில் சேர்த்து ஒரு டம்ளர் நீராக வரும் அளவுக்குச் சுண்டக் காய்ச்ச வேண்டும். 

இதை காலை மாலை என இரு வேளைகளிலும் குடித்துவர வெள்ளைப்படுதல் நோய் குணமடையும்.
Tags: