சுவையான முடக்கத்தான் ரசம் செய்வது எப்படி?





சுவையான முடக்கத்தான் ரசம் செய்வது எப்படி?

முடக்கு வாதத்தை நீக்கக்கூடிய சக்தி இந்த கீரைக்கு உள்ளதாம். அதாவது, முடக்குகளை வேரறுக்கும் தன்மை இருப்பதால் இது முடக்கத்தான் கீரை என்ற பெயர் மருவி வந்து விட்டதாம். இந்த முடக்கத்தான் காய்கள் பலூன் போல இருக்கும். 
சுவையான முடக்கத்தான் ரசம் செய்வது எப்படி?
அதை அழுத்தினால் பட்டாசு போல சத்தம் வரும் என்பதால், இதை சிறுவர்கள் பட்டாசுக்காய் என்றும் சொல்வார்கள். சிலருக்கு 40 வயதுக்கு மேல், இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். 
ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின் ஆரம்ப நிலையாகவும் இருக்கலாம்.. இந்தியாவில் 65 சதவிகித மக்களுக்கு இந்த மூட்டு வலி பாதிப்பு உள்ளது. இதற்கெல்லாம் சிறந்த நிவாரணம் முடக்கத்தான் கீரையாகும். 

மூட்டுவலி பிரச்சனை இருந்தால், தொடக்கத்திலேயே இந்த கீரையை எடுத்து கொண்டால், பூரண சுகமாகும். முடக்கறுத்தான் இலைகளை வெயில் படாமல் நிழலில் உலர வைத்து பொடியாக்கி வைத்து கொண்டால், இருமல் இருக்கும் போது பயன்படுத்தலாம். 

சூடான சாதத்தில் நல்லெண்ணெய் உப்பு, முடக்கறுத்தான் பொடி சேர்த்து கலந்து சாப்பிடலாம். அல்லது இளஞ்சூட்டு நீரில் இந்த பொடியை கலந்து குடித்தால் இருமல் கட்டுப்படும் குழந்தைகளுக்கும் தேனில் கலந்து நாவில் தடவி விடலாம்.

தேவையான பொருட்கள்: 

முடக்கத்தான் இலை-100 கிராம்; 

மிளகு-1/2 தேக்கரண்டி; 

சீரகம்-1/2 தேகக்ரண்டி; 

பூண்டு-10 பற்கள்; 

தக்காளி-2 

சிறிய வெங்காயம்–3; 

கொத்தமல்லி-சிறிதளவு; 

மஞ்சள்தூள்-1 சிட்டிகை; 

உப்பு-தேவையான அலவு; 

நல்லெண்ணெய்-தேவையான அளவு; 

தண்ணீர்- 500 மி.லி. 
நோயை உண்டாக்கும் மெழுகு குலையாத பழங்கள் !
செய்முறை: 

முடக்கத் தான் இலை கள், வெங்காயம், தக்காளி இவை யனைத் தையும் பொடி யாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். 

முடக்கத்தான் ரசம்

ஒரு வாணலியில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி, அதில் மிளகு சீரகம், பூண்டு கொத்த மல்லி, தேவையான அளவு உப்பு இதை யெல்லாம் போட்டு சிறிது நேரம் வதக்கவும்
மஷ்ரூம் காஃபி பலன்கள் என்ன?
பிறகு, முதலில் நறுக்கி வைத்த பொருட்களை வாணலியில் போட்டு லேசாக வதக்கி, தண்ணீருடன், மஞ்சள் தூள் போட்டு, அது சுண்டி வரும் வரை காத்தி ருந்தால், முடக்கத் தான் ரசம் தயார். 

பலன்கள்: 

வாதப் பிடிப்பு, முடக்குவாதம், உள்ளிட்ட வாத நோய்களுக்கும், வாய்வுப் பிரச்சினை, மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சினை களுக் கும் தீர்வு அளிக்கும் சக்தி முடக்கத் தான் கீரைக்கு உள்ளது. பெண்களின் மாதவிடாய் பிரச்சினைக்கு இது உதவுகிறது,

மேலும் முதுகுத்தண்டு வடத்தில் தேய் மானத்தினால் அவதிப்படுபவர்கள் இந்தக் கீரையை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ளலாம்.
Tags: