முள்ளங்கியில் வென் முள்ளங்கி மற்றும் சிவப்பு முள்ளங்கி. என இரு வகைகள் உள்ளன. இந்த இரண்டு முள்ளங்கிகளும் ஒத்த மருத்துவ குணங்களே உள்ளன.
நம் முன் னோர்கள் ஒரு பொரு ளுக்கு பெயர் வைக்கும் பொழது அதன் பயன்கள் மற்றும் அதன் பண்புகளை வைத்தே பெயர் இடுகின்றனர் .
அந்த வகையில் முள்ளங்கியை பார்க்கும் போது இதற்கும் ஒரு சரியான காரணப் பெயரை நம் முன்னோ ர்கள் வைத்திருக் கிறார்கள்.
உலர் காரை தயாரிக்க உருப்படியான இயந்திரம் !
முள்ளங்கி என்ற வார்த்தையை இரண்டாக பிரிக்கும் போது முள் மற்று அங்கி என்று இரு வார்தைகள் வருகிறது அதாவது இந்த முள்ளங்கி நம் உடலுக்கு ஒரு கவச சட்டை போல் காக்கிறதாம். முள்ளங்கியில் மிக அதிகமான கந்தக சத்து இருக்கிறது.
50 ml முள்ளங்கி சாறில் ஒரு டம்ளர் மோர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து தினம் காலையில் வெறும் வயிற்றில் பருகிவர மூல நோயை குணமாக்குமாம் மூலத்தினால் ஏற்படும் வலியும் கடுப்பும் குறைக்கும். வயிற்று எரிச்சலை போக்கக் கூடியது.
வயிற்று புண்னை ஆற்றக் கூடியது. பசியை தூண்டக் கூடியது மேலும் சிறு நீரகத்தை சரியாக வேலை செய்ய வைக் கிறது.
முள்ளங்கி சாறை பயன்படுத்தி இரும்பல் டானிக் செய்முறை
5 லிருந்து 10 எம் ல் முள்ளங்கி சாறு,
ஒரு ஸ்பூன் தேன்
ஒரு சிட்டிகை உப்பு
மேற்கண்ட பொருள்களை ஒன்றாக சேர்க்க இருமலுக்கான டானிக் தயார். தொடர்ந்து இரும்பல் வரும் காலங்களில் இதை பருகினால் இருமல் கட்டுப் பாட்டுக்கு வருமாம்.
பொதுவாக இரும்பல் வரும் போது பெரும்பாலோர் மருத்துவ கடைக்கு சென்று இரும்பல் டானிக்கை வாங்கி பருகுவர் இந்த இருமல் டானிக்கை பருகுவதால் மயக்க நிலை அல்லது ஒரு வித படபடப்பு ஆகிய பக்க விளைவுள் ஏற்படுகிறது.
எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் இயற்கை முறையில் வீட்டிலேயே நாம் இரும்பல் டானிக்கை தயார் செய்து பயன் அடையலாம்.
நீர்கசிவு விரிசல்களை தடுக்கும் பெனிட்ரான் அட்மிக்ஸ் !
குளிர்காலத்தில் முள்ளங்கி அதிக அளவில் கிடைக்கக்கூடிய ஒரு காய்கறி. இந்த வேர் காய்கறியை சாலட், பராதா மற்றும் சாம்பார் போன்ற குழம்பு வகைகளில் சமைத்து சாப்பிடலாம்.
இந்த முள்ளங்கி நமது உணவிற்கு தனித்துவமான சுவையையும், ஊட்டச்சத்தையும் சேர்ப்பது மட்டுமல்லாமல், அதன் இலைகளும் பல்வேறு ஆரோக்கிய நலன்களின் களஞ்சியமாக விளங்குகின்றன.
நீங்கள் வழக்கமான முறையில் முள்ளங்கி இலைகளை சாப்பிட்டு வந்தால் பல்வேறு விதமான நோய்களிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். ஏனெனில் முள்ளங்கி இலைகளில் முள்ளங்கியை காட்டிலும் பல விதமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது.
புரோட்டின், சோடியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், கார்போ ஹைட்ரேட், குளோரின், வைட்டமின் A, B மற்றும் C போன்ற
பல்வேறு விதமான ஊட்டச்சத்துகள் பைல்ஸ், ரத்த சர்க்கரை போன்ற நாள்பட்ட நோய்களை எதிர்த்து போராடக்கூடிய தன்மை கொண்டதாக அமைகின்றது.
அது மட்டுமல்லாமல் இந்த இலைகள் இதய நோய்களை விரட்டக்கூடிய தன்மை கொண்டவை. பைல்ஸ் நோயை விரட்டுவதற்கு உதவுகிறது.
பைல்ஸ் பிரச்னையால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு முள்ளங்கி இலைகள் ஒரு வரப் பிரசாதமாகவே அமைகிறது. இது உடலில் ஏற்படக்கூடிய வீக்கத்தை குறைப்பதன் மூலமாக பைல்ஸ் நோயிலிருந்து நிவாரணம் தருகிறது.
முள்ளங்கி இலைகள் குறைவான கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்டவை. மேலும் முள்ளங்கி இலையில் வைட்டமின் C மற்றும் பீட்டா கரோட்டின் இருப்பதால் இது உடலின் தேவையை பூர்த்தி செய்கிறது.
சமீப காலமாகவே பலர் ரத்த சர்க்கரை பிரச்னையால் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஒரு வேளை நீங்களும் ரத்த சர்க்கரை பிரச்னையால் பாதிக்கப் பட்டிருக்கக் கூடிய ஒருவர் என்றால் உங்கள் உணவில் முள்ளங்கி இலைகளை தினமும் சேர்த்து சாப்பிடுவது உங்களுக்கு பலன் அளிக்கும்.
ஏனெனில் இதில் காணப்படக்கூடிய ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள வெள்ளை செல்களை அதிகரிக்கிறது.
அது மட்டுமல்லாமல் முள்ளங்கியில் குறைவான கிளைசிமிக் எண் இருப்பதால் இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு பாதிக்கப்படாது. மேலும் ரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப் படுவதை இது கட்டுப் படுத்துகிறது.
Tags: