சூப்பரான முள்ளங்கி கீரை மசலா செய்வது எப்படி?





சூப்பரான முள்ளங்கி கீரை மசலா செய்வது எப்படி?

பல்வேறு வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ள முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் நிலத்தடி காய்கறிகளுள் ஒன்று. முள்ளங்கி குறிப்பாக குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த காய்கறி. 
முள்ளங்கி கீரை மசலா
சில செரிமான நொதிகளை ஊக்குவிப்பதும், செரிமான செயல்முறையை துரிதப்படுத்துவதும் இதற்கு முக்கிய காரணம். மேலும், இது பித்த சாறு செயல்பாட்டையும் சீர்படுத்துகிறது. 

அது மட்டுமல்லாமல் பசியின்மை, காய்ச்சல் மற்றும் தொண்டை வீக்கம் போன்ற பிரச்சினைகளை குணப்படுத்துகிறது.  இது தவிர, இதில் உள்ள வைட்டமின் சி ஆரோக்கியத்திற்கான பல நன்மைகளை கொண்டுள்ளது. 

முள்ளங்கியில் பல்வேறு வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன.  நார்சத்து, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு மற்றும் ஃபோலேட் போன்ற பல்வேறு வகையான தாதுக்கள் நல்ல அளவில் உள்ளது.  
முள்ளங்கியிலுள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இது ஃப்ரீ ரேடிக்கல்களின் சேதத்திலிருந்து உடலை பாதுகாக்கிறது மற்றும் இளம் வயதிலேயே ஏற்படும் வயது முதிர்வையும் தடுக்கிறது. 

முள்ளங்கியில் நிறைந்துள்ள நீர்ச்சத்து உங்களை நாள் முழுவதும் நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. முள்ளங்கியை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் பைல்ஸ் என்னும் மூல நோய் பிரச்சனை குறையும். 
முள்ளங்கியில் ராபினின் மற்றும் குளுக்கோசிலினேட்டுகள் போன்ற வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் கலவைகள் உள்ளன. இவை வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவுகின்றன.

தேவையான பொருட்கள் ; 

கீரையுடன் இருக்கும் முள்ளங்கி பெரிதாக - 2; 

உப்புத் தண்ணி ரில் வேக வைத்து எடுத்த முள்ளங்கிக் கீரை - 1 கப்; 
 
பெருங் காயம்-1/4 ஸ்பூன்; 

கடுகு - 1 ஸ்பூன்; 

ஜீரகம் - 1/4 ஸ்பூன்; 

மிள காய்த் தூள் - 1/2 ஸ்பூன்; 

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்; 

சர்கக்ரை - 1/2 ஸ்பூன்; 

ஆம்சூர் தூள் - 1 ஸ்பூன் அல்லது 

எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்

கரம் மசாலா - 1 

எண்ணெய், உப்பு - தேவைக் கேற்ப; 
செய்முறை : 
முள்ளங் கியை சின்ன துண்டு களாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போடவும். முள்ளங்கிக் கீரையையும் நறுக்கி அதில் சேர்க்கவும். உப்பு சேர்த்துப் பிசறி, சிறிது நேரம் வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங் காயம், சீரகம் தாளிக்கவும். தயாராக வைத்துள்ள முள்ளங்கி மற்றும் அத்ன் கீரைத் துண்டுகளை அதில் சேர்க்கவும். 

நன்கு கலந்து வேக வைத்துள்ள முள்ளங்கிக் கீரையையும் சேர்த்துக் கிளறவும். மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து கொஞ் சமாக தண்ணீர் விட்டு வேக விடவும். 

4 நிமிடங்கள் வெந்ததும், சர்க்கரை மற்றும் ஆம்சூர் தூள் அல்லது எலுமிச்சை சாறு சேர்க்கவும். மூள்ளங்கி நன்கு வெந்ததும் எடுத்துப் பறிமாறவும்.
Tags: