பொதுவாக முட்டையை என்றாலே அனைத்து வயதினருக்கும் பிடித்தமான
உணவு. இந்த முட்டையை பச்சையாக குடிப்பவர்கள் சிலருண்டு. சிலருக்கு வேக வைத்த முட்டை பிடிக்கும்.
சிலருக்கு ஆஃப் பாயில் பிடிக்கும், சிலருக்கு முழு ஆம்லேட் பிடிக்கும், சிலருக்கு இந்த முட்டை ஆம்லேட்டோடு சிறிது வெங்காயம், மிளகுத் தூள் கலந்த ஆம் லேட் பிடிக்கும்.
உடல் ஆரோக்கியத்திற்கு முட்டை முக்கியமான உணவுப் பொருளாக உள்ளது. அதனால், தான் மருத்துவர்கள் நமது உணவு பழக்கத்தில் தினமும் ஒரு முட்டை சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கின்றனர்.
அவித்த முட்டை பிடிக்காதவர்கள் முட்டை பொரியல், ஆம்லெட், வேக வைத்த மசாலா முட்டை என பல முறைகளில் சமைத்து சாப்பிடுகிறோம்.
அதுவும், ஆம்லெட் என்றால் நம்மில் பலருக்கும் பிடித்த உணவு பொருட்களில் ஒன்று… எப்போது ஹோட்டல்களில் சாப்பிட்டாலும், அண்ணா, பெப்பர் தூக்கலா ஒரு ஆம்லெட் என்ற வார்த்தை இல்லாமல் அன்றைய சாப்பாடு முடித்திருக்காது.
சரி விஷயத்திற்கு வருவோம் வழக்கமான ஆம்லெட் சாப்பிட்டு அலுத்துப் போயிருக்கும். முட்டைப் பிரியர்களுக்கு இந்த கரண்டி ஆம்லேட் நல்ல மாற்று. செய்வது சுலபம், சுவையோ அதிகம்.
அப்படி, நீங்களும் ஆம்லெட் பிரியராக இருந்தால் நாங்கள் உங்களுக்கு ஒரு புதிய வகை ஆம்லெட் ரெசிபி பற்றி கூறுகிறோம்.
இந்த ரெசிபியை ஒரு முறை செய்து பாருங்கள்… உங்களுக்கு மிகவும் பிடிக்கும். சரி இனி முட்டை கொண்டு கரண்டி ஆம்லேட் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையானவை :
முட்டை-1
சின்ன வெங்காயம் – கைப்பிடி
கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகுத்தூள் – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
பின்னர் ஒரு குழிக்கரண்டியில் சிறிதளவு எண்ணெய் தடவி அதில், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்த மல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து லேசாக வதக்க வேண்டும்.
பிறகு மிளகுத் தூள் தூவி, கலக்கி வைத்திருக்கும் முட்டையை ஊற்றவும். சிறிது நேரத்தில் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
கொழு கொழுவென குண்டாகும் குழந்தைகளே ஜாக்கிரதை !ஓட்டல்களில் ஒவ்வொருவருக்கும் இது போன்று செய்து கொடுக்க நேரமாகும் என்பதால், தற்போது தோசைக் கல்லிலேயே குழிகள் அமைக்கப்பட்டு அதிலேயே கரண்டி ஆம்லெட் சுடச்சுடத் தயார் செய்யப்படுகிறது.