மனிதர்களின் உடலுக்கு அடிப்படை ஆதாரமாக இருப்பது எலும்புகள். அவை ஒரு மனிதனுக்கு பலமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பது அவசியம். உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாதது.
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் புரத சத்துக்கள் நிறைந்துள்ளன. அசைவ உணவான இறைச்சி, முட்டையில் அதிக புரதம் உள்ளது. சைவ உணவை பொறுத்தவரை பருப்பு வகைகளை தான் நாம் குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
அன்றாடம் நம்முடைய உணவுடன் கலந்து இருக்கும் பருப்பு வகையில் உள்ள சத்துக்கள் அதிகம்.
பச்சை பட்டாணியில் 'வைட்டமின் கே' சத்து அதிகம் நிறைந்துள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள் மாற்றும் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது.
மனிதர்களுக்கு இளமை காலங்களில் தோலில் பளபளப்பும், இளமை தன்மையும் அதிகம் இருக்கும்.வயது ஏறிக்கொண்டு செல்லும் காலத்தில் தோலில் சுருக்கங்கள் விழ ஆரம்பிக்கும்.
இந்நிலைக்கு முக்கிய காரணம் நமது உணவில் மக்னீசியம் சத்து குறைவதே ஆகும். பச்சை பட்டாணியில் இந்த மக்னீசியம் அதிகமுள்ளது. பட்டாணி தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தோல் சுருக்கங்கள் ஏற்படுவது தள்ளிப் போகிறது.
கொலஸ்ட்ரால் என்பது உணவில் இருக்கும் தீமையான கொழுப்புகள் உடலில் ரத்தத்தில் படிந்து எதிர்காலத்தில் இதயம் சம்பந்தமான கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
பச்சை பட்டாணியில் பீட்டா குலுக்கன் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இதை சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் படிவதை தடுக்கிறது. உடல் எடை அதிகமாகாமல் தடுக்கிறது.
சரி இனி பருப்பை கொண்டு கிச்சடி செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 1/2 கப்;
பாசிப் பருப்பு - 1/4 கப்;
மிக்ஸட் காய்கறிகள் கேரட், பட்டாணி, பீன்ஸ், காலி ஃப்ளவர் - 1 கப்;
நெய் - 1 டேபிள் ஸ்பூன்;
கரம் மசலா - 1/4 டீ ஸ்பூன்;
பச்சை மிளகாய் - 1;
சீரகத் தூள் - 1/4 டீ ஸ்பூன்;
உப்பு - தேவை யான அளவு.
செய்முறை :
அரிசி பருப்பைக் கழுவி, 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். குக்கரில் நெய் சேர்த்து, பச்சை மிளகாய் தாளித்து நறுக்கிய காய் கறிகளை போட்டு, 1 நிமிடம் வதக் கவும். உப்பு, சீரகத் தூள் சேர்க்கவும்.
அத்துடன் 3 கப் தண்ணீர் சேர்த்து, அரிசி, பருப்பை சேர்த்து, கரம் மசாலா சேர்த்து குக்கரை மூடி 6 விசில் வரும் வரை வேக விடவும்.
குழைய வேக வைத்து இறக்கவும். தேவைப்பட்டால், சிறிது நெய் சேர்த்து சூடாகப் பறி மாறவும்.