தக்காளி பற்றி தெரிந்ததும் தெரியாததும் !





தக்காளி பற்றி தெரிந்ததும் தெரியாததும் !

அன்றாட சமையலில் தக்காளி முக்கிய பங்கினை வகிக்கக் கூடியது. மிக குறைந்த விலையில் எளிதாக கிடைக்கக் கூடிய தக்காளி அதிக மருத்துவ குணங்கள் நிறைந்தது.
தக்காளி பற்றி தெரிந்ததும் தெரியாததும் !
தக்காளியை எப்படி வேண்டுமானாலும் நமது உணவில் சேர்த்து கொள்ளலாம். இதனால் அதன் மருத்துவ பயன்கள் அப்படியே நம்மை வந்து சேரும்.

தக்காளியினை நம் உணவில் சேர்த்து கொள்வதால் மூலம் புற்று நோய் ஏற்படுவதை கூட தவிர்க்க முடியும். தக்காளியில் காணப்படும் லைகோபீன் என்னும் நிறமியானது அதன் சிவப்பு நிறத்திற்கு காரண மாகும்.
ஆரஞ்சு பழங்களின் பயன்கள் !
இந்த லைகோபீன் புற்று நோய் உண்டாகாமல் தடுக்கும் தன்மையினை உடையது. இது உடலில் உள்ள நச்சினை வெளியேற்றி புற்று நோய் செல்களுக்கு எதிராக செயல்படும்.

மேலும் இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் விரைவில் சருமம் முதிர்ச்சி அடை யாமல் தடுக்கிறது. புரோஸ்டேட் புற்று நோயினால் பாதிக்கப் பட்டுள்ள ஆண்கள் தக்காளியினை சாப்பிட்டு வந்தால் நோயின் தீவிரம் குறையும்.
தக்காளி பற்றி தெரிந்ததும் தெரியாததும் !
வாரம் ஒன்றரை கிலோ தக்காளியினை உணவில் சேர்த்து கொள்பவர்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 20 சதவீதம் குறைவு என ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.

பெண்கள் உணவில் அதிகமாக தக்காளியினை சேர்த்து கொள்வதால் பெண்களுக்கு ஏற்படக் கூடிய கர்ப்பபை வாய் புற்றுநோய், மார்பக புற்று நோய் போன்ற வற்றை தடுக்கலாம்.
ஆர்டர் செய்த உணவு கேன்சல் எதற்காக - சொமட்டோ பதிலடி !
தக்காளியில் ஆல்பா மற்றும் பீட்டா கரோட்டின், லூட்டின் போன்றவை நிறைந்துள்ளது. இவை நமது உடலினை நலமாக வைத்து கொள்ள உதவுகிறது.

தக்காளி யின் தோலை நீக்காமல் சாப்பிடுவதால் குவர்சிடின், கேம்ப்ரோல் போன்ற பிளேவனாய்டுகள் கட்டிகள் மற்றும் வீக்கங்களுக்கு எதிராக செயல்படக் கூடியவை.

மேலும் இதில் உள்ள விட்டமின் ஏ கண்ணில் ஏற்படும் குறைபாட்டினை சரி செய்ய வல்லது. மாலைக் கண் நோய் ஏற் படாமல் தடுக்கும்.
தக்காளி பற்றி தெரிந்ததும் தெரியாததும் !
உடலுக்கு மட்டுமல்லாது சருமத்திற்கும் பாதுகாப்பினை அளிக்கக் கூடியது. தக்காளி சாற்றினை அரைத்து முகத்தில் தடவுவதால் எண்ணெய் பசை இன்றி சருமம் பொலிவாக இருக்கும்.

தக்காளி சாற்றுடன் சிறிது வெள்ளரி சாற்றினை சேர்த்து தேய்த்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
நோய்களை மாயமாக்கும் தேங்காய் மாயா ஜாலம் !
இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள பொட்டாசியமானது பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். 

உடல் பருமன் உடையவர்கள் பழுத்த தக்காளியினை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் உடல் எடையினை குறைக்கலாம்.
Tags: