இன்றைக்கு அசைவம் சாப்பிடுவது பற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று… அசைவம் சாப்பிட்டால், உடம்பு வளரும், மூளை வளராது சைவமே சிறந்தது என்பது.
இரண்டாவது… அசைவம் சாப்பிடு வோருக்குக் காய், கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது.
undefined
இவை இரண்டில் எது சரி?
உண்மை இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பதே சரி!
அசைவம் சாப்பிட்டால், மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்க த்தை இழிவு படுத்தும் ஒரு கருத்து.
நோபல் பரிசு வாங்கியவர்களில் 99 சதவிகிதத் தினரும், உலகை உலுக்கி மாற்றிய
மைக்ரோ சாஃப்ட், ஆப்பிள் முதலாளி களும் அசைவப் பிரியர்கள் தான்.
புலாலில் உள்ள புரதமும் சில நுண் சத்துக்களும் பொது வாகக்
காய், கனிகளில் குறைவு.
உதாரண த்துக்கு, 100 கிராம் ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச் சத்து உண்டு.
100 கிராம் கேரட்டில் 300 மைக்ரோ கிராம் தான் இரும்புச் சத்து இருக் கிறது.
ஆகையால், அசைவ த்தின் ஆற்ற லைக் கேள்விக் குறியாக்க வேண்டியது இல்லை.
ஆனால், அசைவம் மட்டுமே போதுமா? அசைவ த்தை எப்படிச் சாப்பிட வேண்டும்?
எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பது தான், முக்கிய மான ஒரு கேள்வி!
ஏனென் றால், போருக்குப் போகும் வீரன் சாப்பிட்டது, காரில் போகும் சுகவா சிக்கு அப்படியே சரிப்படாது.
அன்று முதல் இன்று வரை கட்டுமரத்தில் நெடுஞ் சாணாக நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு,
நோஞ் சானாக கேண்டில் லைட் டின்னரில் ஃபிஷ் ஃப்ரை ஆர்டர் செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீ யருக்குச் சரி வராது.
கல்லீரலில் கொழுப்பு படிதல் !
உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக்கும் உண்ணும் அளவைத் தீர்மா னிப்பதில் எப்போதுமே முக்கிய மான பங்கு உண்டு.
அசைவம் சாப்பிட லாம். ஆனால், அளவாகச் சாப்பி டுங்கள்.
ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பம் வாரத்துக்கு ஒரு நாள்
அரை கிலோ ஆட்டு இறைச் சியோ,
ஒரு கிலோ கோழிக் கறியோ, ஒரு கிலோ மீனோ சாப்பிட்டால் போதுமானது.
அதையும் கூட இரண்டு நாட்களாகப் பிரித்து எடுத்துக் கொண்டால், இன்னும் சிறப்பானது. ஏனைய நாட்களில் காய், கனி களுக்கு இடம் கொடுங்கள்.
வாரத்தில் ஒரு நாள் – குறைந்தது ஒரு வேளை யேனும் வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து விரதம் இருங்கள். எல்லாமே விருந்து தான்.
எல்லா வற்றுக் குமே ஒரு புரிதல் தேவைப் படுகிறது!
அட்டகாச மான கறி விருந்து சாப்பி ட்டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவை யலுடன் எளிமை யாக
அன்றைய சாப்பாட்டை முடித்துக் கொள்ளும் வழக்கம் நம் முன்னோர் களிடம் உண்டு.
ஆட்டின் இறைச்சி உடலுக்குத் தேவை யான வலுவைத் தரும் என்றால்,
கொள்ளும் இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும் என்பதை அறிந்து வைத்திரு ந்தார்கள் நம் முன்னோர்கள்.
நாம் எதை அறிந்து வைத்திருக்கிறோம்? மாமிசம் சாப்பிடும் போது, நிச்சயம் இஞ்சி, பூண்டு, சீரகம், மல்லி, பெருங்காயம் இருக்க வேண்டும் என்கிறது தமிழ் மருத்துவம்.
இது வரை எந்தத் தமிழர் வீட்டு அடுப்பங் கரையிலும் இந்தக் கறி மசாலா இல்லா மல் கிடாக் கறி சமைக்கப் பட்டது கிடையாது.
ஆனால், புதிதாக வெளி நாட்டில் இருந்து இங்கு மூலைக்கு மூலை முளைத்து உள்ள பன்னாட்டு கறிக் கடைகள்
பொரித்தும் அவித்தும் தரும் கறி பக்கோடாக்களில் கறி மசாலாவை நீங்கள் பார்க்க முடியாது தெரியுமா?
சரி, கண்ணாடிக் குளிர் அறைகளில், நண்பர் களுடன் உட்கார்ந்து சாப்பிடு கிறீர் களே…
அந்தக் கறியில் என்னென்ன எல்லாம் கலந்து இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்…
நூற்றுக் கணக்கான ரசாயனக் காரணிகள் அவற்றில் உண்டு. ஏகப்பட்ட ரசாயன உப்புகள் உண்டு.
குறிப்பாக, புற்று நோய்க்கு வரவேற்பு வளை வுகள் வைக்கும் சோடியம் நைட்ரேட், மோனோ சோடியம் க்ளூட்டமேட் உப்புகள் உண்டு.
கோழி நல்ல உணவு.
ஆனால், அது தானாக இரை தேடி வளர்ந்த கோழி யாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்ந்த கோழியாக இருக்கக் கூடாது.
கோழிக் கறி பொது வாக உடல் சூட்டைத் தந்து நோய் போக்கக் கூடியது.
சாதாரண சளி, இருமல், மந்தம் போக்கக் கூடியது; உடல் தாதுவை வலுப் படுத்தி ஆண் மையைப் பெருக்கக் கூடியது என்கிறது சித்த மருத்துவம்.
உதாரண மாக
கோழியில் நார்ச் சத்து அதிகம்; வைட்டமின் பி 12 சத்தும் அதிகம்.
உடல் எடை அதிகரிக் காது, வலுவுடன் ஆரோக்கி யத்துடன் இருக்க சிக்கனு க்கு இணை எதுவும் இல்லை என்கிறது
நவீன உணவியல்.
நம் ஊரில் கருங்கோழி எனும் நாட்டு இனக்கோழி இன் றும் இருக் கிறது.
காலில் அதிக மயிருடன் ஷூ போட்டது போல் மிடுக்காக இருக்கும்.
அந்தக் கோழியின் சதைப் பகுதியும் கூட கருஞ் சிவப்பு நிறமாக இருக்கும். தமிழ் மருத்துவம்.
தசை சூம்பி வலு விழந்து இருக்கும் பக்கவாத நோயின ருக்கும், பிற தசை நோயின ருக்கும்
இந்தக் கோழியை த்தான் உணவாக, மருந் தாகப் பன்னெடுங் காலமாக உரக்கச் சொல்லி வருகிறது.
நாம் இப்போது சாப்பிடும் கோழி இறைச்சி யின், பின்னணி குறித்து, ‘கூவாத கோ ழியும்,
குடை சாயும் இறை யாண்மை யும்’ என்ற புத்த கத்தில் அதன் ஆசிரியர் சுந்தர ராசன் கூறும் தகவல் கள் அதிர வைப்பவை.
‘பிராய்லர் கோழி களின் செழுமை யான தோற்றத் துக்காக அளிக்கப் படும்.
‘ரோக்ஸார்சோன்’ (Roxarsone) என்ற மருந்து மனிதர் களுக்குப் புற்று நோயை உருவாக்க வல்லது என்கிறது