வீட்டிலேயே இறைச்சியை சமைத்து உட்கொள்ள விரும்புபவரா நீங்கள்? அப்படியெனில் உங்களுக்கான பதிவு தான் இது.
வீட்டிலேயே சுவையாக இறைச்சியை சமைக்க வேண்டும் எனில் கடையிலிருந்து இறைச்சி வாங்கும் போது மிகவும் கவனமுடன் தரமான சுவையுடைய இறைச்சியை தேர்வு செய்வது மிகவும் முக்கியமானது.
இதனால் உடலுக்கு ஆரோக்கியமாகவும் அதே சமயத்தில் சுவை குறையாமலும் நம்மால் இறைச்சியை சமைக்க முடியும். இறைச்சி வாங்கும் போது அதன் நிறத்தை வைத்து அதன் தரத்தை நம்மால் கண்டு கொள்ள முடியும்.
உதாரணத்திற்கு மட்டனை பொருத்தவரை அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும் இறைச்சியை தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லது.
சிக்கனைப் பொறுத்தவரை லேசான பின்க் நிறத்திலோ அல்லது வெள்ளை நிறத்திலோ இருக்கும் இறைச்சி ஆரோக்கியமாக இருக்கும். ஒருவேளை இறைச்சி மிகவும் அடர் நிறத்தில் இருக்கும் பட்சத்தில் அவை பழைய இறைச்சியாக இருக்கக்கூடும்.
அது போலவே இறைச்சி பச்சை அல்லது சாம்பல் நிறத்தில் இருப்பது போல தோன்றினால் அவை பழைய இறைச்சியாகவோ அல்லது கெட்டுப் போன இறைச்சியாகவோ இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.
இறைச்சி தொட்டு பார்த்து அதன் அமைப்பை உணர்ந்து வாங்க வேண்டும்: இறைச்சி வாங்கும் போது அதனை தொட்டு பார்த்து அதன் அமைப்பை பார்த்து வாங்குவது மிகவும் நல்லது.
இறைச்சியின் மீது உங்களது விரல்களை வைத்து லேசாக அழுத்த வேண்டும். அந்த இறைச்சியானது நீங்கள் கையை எடுத்தவுடன் பலூன் போல மீண்டும் பழைய அமைப்பிற்கே வரும் பட்சத்தில் அதனை தாராளமாக வாங்கலாம்.
ஆனால் நீங்கள் கையை வைத்து அழுத்திய இடத்தில் பள்ளம் போல அப்படியே அமுங்கிக் கிடந்தால் அதனை அப்படியே விட்டு விடுவது நல்லது.
எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தலாமா? டிப்ஸ்!
தேவையான பொருட்கள் :
கைமா (கொத்துக்கறி) - 1/4 கிலோ
உருளைக் கிழங்கு - 1/4 கிலோ
முட்டை - 2
கொத்த மல்லி - சிறிதளவு (நறுக்கியது)
டால்டா - 200 கிராம்
எலுமிச்சம் பழம் - 1/2 மூடி
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 2 நறுக்கியது
பட்டை - சிறிதளவு
கிராம்பு - 3
ரஸ்க் தூள் - 50 கிராம்
இஞ்சி - சிறுதுண்டு (பொடியாக நறுக்கியது)
பூண்டு பல் - 5 (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவைக்கேற்ப
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !
செய்முறை
கைமாவைச் சுத்தம் செய்து, எலுமிச்சம் பழம் பிழிந்து, உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக வைக்கவும். பின் நீரை வடித்து விட்டு வதக்கவும். உருளைக் கிழங்கை வேக வைத்து மசிக்கவும். பட்டை, கிராம்பு இரண்டை யும் தூள் செய்யவும்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், மிளகாய், கொத்த மல்லி இலை, உருளைக் கிழங்கு, பட்டை, கிராம்பு பொடி இவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
மட்டனுடன் இதை நன்கு மிக்ஸ் செய்யவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை அடித்து ஊற்றி சிறிது உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும்.
மட்டன் கலவையை இதில் முக்கி ரஸ்க் தூளில் புரட்டவும். இதை வடை போல் தட்டி, காய்ந்த எண்ணெயில் புரட்டி வேக வைத்து எடுக்கவும். சுவையான இறைச்சி வடை ரெடி.